ஐபோன் விளம்பரத்தில் கர்நாடக இசை

SOCIAL SHARE
Pin It

கடந்த ஆண்டு அக்டோபரில் ஐபோன் 12 மாடல் அறிமுகமானது. இதில் கேமரா, மெமரி, டிஸ்பிளே பேட்டரி என வழக்கம் போல நிறைய அப்டேட்களை தந்துள்ளது.  கீழே விழுந்தாலும் பெரிதாக சேதமடையாத வகையில் செராமிக் கவசம்  அம்சம் காக்கும் என விளம்பரங்களில் கூறி வருகிறது. அந்த வகையில் புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதின் ஷாவ்னேவின் 'தி கான்ப்ரன்ஸ்' என்ற பாடலை பயன்படுத்தியுள்ளது.

ஆப்பிள் வெளியிட்ட வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஐபோன் 12 மாடல் மொபைலில் பேசியபடி சாலையில் நடந்து செல்கிறார். போனை மற்றொரு காதுக்கு மாற்றும் போது அது நழுவுகிறது. அப்போது ததிகிட ததிகிட தா என்று தபாலே இசையுடன் பாடல் தொடங்குகிறது. கீழே விழப்போகும் போனை பிடிக்க அப்பெண் செய்யும் முயற்சிகளுக்கு இணையாக அந்த இசையும் பயணிக்கிறது. இறுதியில் போன் தரையில் விழ, ரிலாக்ஸ் இது ஐபோன் என விளம்பரம் முடிகிறது.

ஐபோனின் இந்த சிறப்பம்சத்தை விட அதில் பயன்படுத்தி இருக்கும் இந்திய பாரம்பரிய இசையை அனைவரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். அவ்விளம்பரம் 9 லட்சம் பார்வைகளை நெருங்கி வருகிறது. அந்த இசை 1999-ம் ஆண்டு நிதினால் வெளியிடப்பட்ட 'பியான்ட் ஸ்கின்' என்ற ஆல்பத்தில் இருந்த பாடல் ஆகும். இசையமைத்த நிதினின் பூர்விகம் பஞ்சாபின் ஜலந்தர் ஆகும்.

 

ARUNACHALAM