Editor's Choice

பெரியார் பல்கலைக்கழகமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிறுவனம் Periyar University
பணியின் பெயர் JRF & Supporting Staff
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Supporting Staff – 28 வயது

Junior Research Fellow – 30 வயது

Junior Research Fellow – Environmental Science/ Botany/ Zoology/ Biotech/ Microbiology/ Biochemistry/ Geology பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Supporting Staff – Biological Sciences/ Life Sciences/ Geology/ Chemistry பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Editor's Choice

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் செவ்வாயன்று தென் கொரிய அதிபரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளை “கவலை அளிப்பவை” என்று குறிப்பிட்டதற்காக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியா, அமெரிக்கா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தைகளில் இடையூறு எதுவும் ஏற்படுத்தக் கூடாது என்று யோ ஜாங் மேலும் கூறினார்.

கடந்த வாரம், ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே வட கொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால், அங்கே பதற்றம் அதிகரிக்கக் கூடும் என்ற சூழ்நிலை உருவாகியது.

ஜப்பான் அருகே கடலில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா (North Korea) ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் யோஷிஹிடா சுகாவும் உறுதி படுத்தினார். 

ஜப்பான் அரசு வெளியிட்ட அறிக்கையில், மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம், மேலும் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறியது. 

கிம் யோ ஜாங், தென்கொரியா  அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக விமர்சித்தார்.

ஏவுகணை சோதனையை அமெரிக்கா கண்டித்ததோடு, வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன எனக் கூறியது

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் தவறான  நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், அதன் தற்காப்பு ஏவுகணை சோதனையை விமர்சிப்பதன் மூலம் "ஆழ்ந்த விரோதத்தை" வெளிப்படுத்தியதாகவும் வட கொரியா அமெரிக்காவிற்கும் கண்டன அறிக்கை வெளியிட்டது.

Editor's Choice

அமெரிக்காவில் 'எச் - 1பி விசா' வினியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலாவதி ஆகி இருப்பதால் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச் - 1பி விசா வழங்கப்படுகிறது.

இந்த விசாவை இந்தியர்களும் சீன நாட்டினரும் தான் அதிக அளவில் பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடியால் ஏராளமான அமெரிக்க இளைஞர்கள் வேலையை இழந்தனர். இதையடுத்து அவர்களின் நலனைக் கருத்தில் வைத்து முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெளிநாட்டினருக்கு எச் - 1பி விசாக்களை வினியோகிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கடந்த டிசம்பரில் காலாவதியாகி இருந்தது. எனினும் அந்த தடையை நீட்டித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஜனவரியில் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியுரிமை மற்றும் குடிவரவு கொள்கைகள் மோசமாக இருப்பதாகவும் அவை திரும்பப் பெறப்படும் என்றும் உறுதியளித்தார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் எச் - 1பி விசாவுக்கு இருந்த தடை முடிவுக்கு வந்தது. அந்த தடையை மேலும் நீட்டிக்க விரும்பாத அதிபர் பைடன் அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இனி வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1பி விசாக்கள் வழங்கப்படும். தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Editor's Choice

பஞ்ச பூத சக்திகளை முறைப்படுத்தி நல்ல பலன்களை அடைவதற்காக, எட்டு திசைகளையும் அடிப்படையாக கொண்டு, கட்டுமான வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. வாஸ்து ரீதியாக எட்டு திசைகளை ஆளும் தேவர்கள் மற்றும் உப தேவர்கள்  காணலாம்

இந்திர திசை
 
கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசையாகவும், சூரியன் உதிக்கும் திசையாகவும் இருப்பதால் மற்ற எல்லா திசைகளையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கு திசையின் கடவுளர்கள் ஈசானன், பர்ஜன்யன், ஜயந்தன், இந்திரன், சூரியன், ஸத்யன், பிருசன், அக்னி, வாயு ஆகிய ஒன்பது பேர்கள் ஆவார்கள். அவர்களில் இந்திரன் முதன்மை பெற்றவர் என்பதால், கிழக்கு திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள் புகழும், செல்வ வளமும் பெறுவதாக ஐதீகம்.
 
அக்னி திசை
 
ஆக்கினேயம் என்று சொல்லப்படக்கூடிய, கிழக்கு-தெற்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த தென்கிழக்கின் அதிபதி அக்னி ஆவார். வீடுகளின் இத்திசை அக்னிக்கு உரியது என்பதால் சமையலறை, மின்சாரம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றுக்கு உரிய பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எம திசை
 
தெற்கு திசையின் பிரதான அதிபதி எமன் ஆவார். அவருடன் சேர்த்து பூஷா, விததன், கிருகக்‌ஷதன், கந்தர்வன், பிருங்கராஜன், மிருகன் ஆகிய ஏழு கடவுளர்கள் இத்திசையில் உள்ளனர். தென் திசை நோக்கி சுப காரியங்கள் செய்வது ஐதீகமாக கடைபிடிக்கப்படுவதில்லை.
 
நைருதி திசை
 
தெற்கு-மேற்கு ஆகிய இரண்டு திசைகளுக்கும் இடைப்பட்ட பகுதியான தென்மேற்கின் அதிபதி நிருதி (நைருதி) ஆவார். அரக்க குணம் படைத்த நிருதிக்கு உரிய இந்த திசை சுப பலன்களை அளிப்பதில்லை. வீட்டின் தென்மேற்கு திசையான நிருதியில் கனமான பொருட்களை வைப்பது, மேல்நிலை தண்ணீர்த் தொட்டி மற்றும் படுக்கையறை ஆகியவை அமைக்க ஏற்றது.
 
வருண திசை
 
மேற்கு திசை வருணனுக்கு உரியது. மழை மற்றும் நீர் ஆகியவற்றிற்கு உரிய மேல் திசை கடவுளர்களில் வருணன் முக்கியமானவர். மேற்கு திசை கடவுளர்கள் பித்ரு, தவ்வாரிக, சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், அசுர, சோஷ, பாப, ரோக ஆகிய ஒன்பது பேர்களில், ரோக, பாப. அசுர, தவ்வாரிக, பித்ரு ஆகியோர் அசுப தன்மை பெற்றவர்கள். சுக்ரீவ, புஷ்பதந்த, வருணன், சோஷ ஆகியோர்கள் சுபத்தன்மை பெற்றவர்கள்.
 
வாயு திசை
 
மேற்கு-வடக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்த வடமேற்கு திக்கின் அதிபதி வாயு ஆவார். காற்று, இப்பகுதியில் நுழைவதைத் தடுக்கும் விதத்தில் உயரமான மரங்களை இப்பகுதியில் வளர்ப்பது, இந்த பகுதியில் உள்ள வீட்டின் மேல்தளத்தை உயர்த்திக் கட்டுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
 
குபேர திசை
 
வடக்கு திசையின் பிரதான கடவுள் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் ஆவார். வடக்கு திசைக்கு திதி, அதிதி, உதிதி என்ற பெயர்கள் உண்டு. சர்ப்ப, சோம, பல்லாட, முக்கிய, அஹி ஆகிய ஐந்து கடவுளர்கள் வடக்கு திசையில் உள்ளனர். வாஸ்து ரீதியாக வடக்கு சுப திசையாக கருதப்படுவது ஐதீகம்.
 
ஈசான திசை
 
வடக்கு-கிழக்கு ஆகிய இரு திசைகளுக்கு இடையில் அமைந்துள்ள வடகிழக்கு திசையின் அதிபதி ஈசானன் ஆவார். இத்திசையில், கழிவறை, உபயோகமற்ற பொருள்களை வைக்கும் ஸ்டோர் ரூம் போன்றவற்றை அமைப்பது கூடாது. கிணறு, நிலத்தடி நீரை எடுக்கும் ‘போர்வெல்’, பூஜை அறை மற்றும் படிப்பறை ஆகியவற்றை இப்பகுதியில் அமைப்பது ஐதீகமாக உள்ளது.
Editor's Choice

எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

தொடர்ந்து நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுகளில், சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து, லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரிக் கரையில் இருந்து மட்டும், இருதரப்பு ராணுவ வீரர்களும், 'வாபஸ்' பெறப்பட்டனர்.

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது : கிழக்கு லடாக்கின் இதர பகுதிகளில் இருந்து, இருதரப்பு ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து, சீனா தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இதில் ஒருமித்த முடிவை எட்டுவதற்கான முயற்சியில், இருதரப்பு ராணுவம் மற்றும் துாதரக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து ராணுவ வீரர்களை விரைவில் திரும்பப் பெறப்படவேண்டும்.அந்த பணிகளை விரைவில் நிறைவு செய்ய, சீன தரப்பு, எங்களுடன் இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம் என அவர் கூறினார்.

Editor's Choice

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.
 
கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை. ஆனாலும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
ஊரடங்கு வரும் என்பவை வெறும் வதந்திகள் தான். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.

பக்கம் 1 / 74