Editor's Choice

விருது! நீளமோ, குட்டையோ.... விலை மதிப்போ, விலை குறைவோ... தங்கமோ, வெண்கலமோ... எதுவாக இருந்தாலும் விலைமதிப்பற்றது விருது! சாதனைகளைப் பாராட்டி கொடுப்பது மட்டுமே விருதின் நோக்கம் அல்ல. இனி நீங்கள் ஓட வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது, துவளாமல் மனம் சோர்வடையாமல் உற்சாகமாக ஓடி, இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகரிக்கச் செய்யும் டானிக் தான் விருது. அவரைப் போல் நாமும் அந்த விருதைப் பெற வேண்டும் என்ற ஊக்கத்தை, இளையோர்க்கு அளிக்கும் தூண்டுகோல் தான் விருது. விளையாட்டுத் துறையில்  உழைத்தவர்கள், அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரங்கள், விருதுகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் புத்தகம் இது. ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்கார் விருது ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சாஹன் புருஸ்கார் என்பது ஒரு விளையாட்டு கௌரவமாகும். இந்தியில் இந்த விருதின் பெயர் தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில் விளையாட்டின் ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சியில் பெருநிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் ஈடுபாட்டை இந்த விருது அங்கீகரிக்கிறது. இந்த விருது 2009 இல் தொடங்கப்பட்டது மற்றும் வழிகாட்டுதல்கள் 2015 இல் திருத்தப்பட்டன. திருத்தம் செய்யப்பட்டதிலிருந்து, நான்கு பிரிவுகளில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது: வளரும் மற்றும் இளம் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பது, விளையாட்டுக்கு ஊக்கம் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்பு, விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு நலன் நடவடிக்கைகள், மற்றும் வளர்ச்சிக்கான விளையாட்டு என்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு வகையிலும் ஒரு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020 வரை, 39 வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மொத்தம் 47 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற ஐந்து பேருக்கும் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது தேசிய விளையாட்டு விருதுகள் மற்றும் தேசிய சாகச விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடந்த 25 ஆண்டுகளாக விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பிற்காக மனவ் ரச்னா கல்வி நிறுவனங்களுக்கு (விஸிணிமி) இந்த விருது வழங்கப்படுகிறது.

Editor's Choice

100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் வினோத நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது ஒன்றும் ஜப்பானியர்களுக்கு புதிது கிடையாது. தங்களை மோசடி செய்யும் இணையின் காதலரை மனம் மாற்றி அவர்களின் காதலை கைவிடச் செய்வதற்காகவும், நிறுவனங்களுக்காக நடுத்தர வயதுடையோரயும் வாடகைக்கு எடுத்து பரபரக்க வைத்த ஜப்பானியர்கள் தற்போது அதிக எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழியை தொடங்கி மிரள வைத்திருக்கின்றனர்.

“Debucari” என்ற இந்த புதிய சேவை ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள அந்நிறுவனத்தார் இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் கட்டணமாக தர வேண்டும் இந்திய மதிப்பில் ரூ.1,300.

இந்த விநோத சேவை குறித்து கூறும் அந்நிறுவனர், குண்டு மனிதர்களை எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். உங்களை விட குண்டான மனிதரை பார்த்து உங்களை நீங்களே நன்றாக உணருவதற்கோ, எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை வாங்குவதற்காக செல்லும் போது அதனை உடுத்திப் பார்க்க ஒரு மாடல் தேவை என்றாலோ, டயட் பிளான் குறித்த விளம்பரங்களை எடுப்பதற்கான மாடல் தேவை என்றாலோ இப்படி பல காரணங்களுக்காக உங்களுக்கு குண்டு நபர்கள் தேவை எனும் போது எங்களை அனுகி சேவையை பெறலாம் என வித்தியாசமான கோணத்தில் பதில் தருகிறார்.

மேலும் “Debucari” -ன் விளம்பரங்களில் எங்குமே குண்டு நபர்களை அநாகரிகமாகவோ, அவமதிக்கும் வகையிலோ குறிப்பிடவில்லை என்றும் இதனை பாசிட்டிவாகவும், குண்டு நபர்களை அதிகாரப்படுத்தும் வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

“Debucari”-ல் பதிவு செய்து கொள்ள நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட ஆண், பெண் என இருபாலரும் பதிவு செய்து கொள்ளலாம்,

மேலும் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை முழுவதும் வாடகைக்கு எடுக்கப்படும் நபருக்கே அளிக்கப்படும் எனவும், கார்பரேட்களிடமிருந்து கமிஷனாக பெறப்படும் தொகையை மட்டுமே தாங்கள் எடுத்துக் கொள்வோம் என அவர் கூறுகிறார்.

Debucari நிறுவனத்திடம் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்யோ, ஒசாகா மற்றும் அய்சி போன்ற நகர்களில் உள்ள குண்டு நபர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார். ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது கொஞ்சம் வித்தியாசமானது” என ராணி தெரிவித்துள்ளார். அதை கேட்டு அங்கு குழுமியிருந்த பலரும் சிரித்து மகிழ்கின்றனர். 

கடந்த ஏப்ரல் மாதம் அவரது பிறந்தநாளை கொண்டாட ராணி தவறிய நிலையில் இந்த நிகழ்வை ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாகவே கருதுகின்றனர் பிரிட்டன் மக்கள். கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். 

Editor's Choice

குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என பெற்றோர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது சில நாடுகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாசி வழியாக தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனையில் இதுவரை உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தவித பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய விஞ்ஞானி கமலேயா இன்ஸ்டிடியூட்டின் தலைவரான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் அவர்கள் குழந்தைகளுக்கு நாசியில் தடுப்பூசி போட்டதில் இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, உலகம் முழுவதிலும் இருந்து கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வரவேற்கும் விதமாக தன் நாட்டின் எல்லைகளை திறந்துள்ளது ஸ்பெயின் அரசு. இதுபற்றி கூறியுள்ள அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கரோலினா டாரியாஸ், சுற்றுலாவில் உலகளாவிய தலைமையை மீட்டெடுக்கும் பணியில் தங்கள் நாடு ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது ஸ்பெயின் ஒரு பாதுகாப்பான இடமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அதே போல ஸ்பெயினுக்குள் நுழையும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையுடன் தடுப்பூசி போடாத ஐரோப்பியர்கள் இனி அதற்கு பதிலாக மலிவான ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். 

Editor's Choice

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் தனக்கு சிறிது நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக PSL எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து அபுதாபிக்கு மாற்றப்பட்டன. இந்தத் தொடரின் 19வது லீக் ஆட்டம் ஷேக் சயது மைதானத்தில் சனிக்கிழமை  நடைபெற்றது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவல் சல்மி அணிகளுக்கு இடையிலான போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டுப்ளசிஸ்.

ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஃபாப் டுப்ளசிஸ் பந்து எல்லைக்கோட்டை தொடாமல் தடுப்பதற்காக மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். பந்தை பிடிக்கும் முயற்சியின் போது சக அணி வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இந்த மோதலில் டுப்ளசிஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டுப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் டுப்ளசிஸ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஓட்டலுக்கு திரும்பிவிட்டேன், குணமடைந்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் சரியாகிவிடுவேன். விரைவில் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” இவ்வாறு டுபிளசிஸ் தெரிவித்துள்ளார்.

டுபிளசிஸுக்கு நேர்ந்த இந்த எதிர்பாராதவிதமான நெருக்கடி ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில் தற்போது அவர் நம்பிக்கையுடன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Editor's Choice

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு நேரத்தில் குதிரையுடன் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

ராஞ்சி நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வரும் தோனி, அந்த வீட்டில் குதிரை ஒன்றையும் வளர்த்து வருகிறார்.  கடந்த மாதம், அந்த குதிரைக்கு மசாஜ் செய்ததுடன் அதனுடன் விளையாடினார்.  இந்த வீடியோவை அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டார்.
 
இந்த நிலையில், மற்றொரு வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  அதில், குதிரையுடன் தோனி ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  இதனால், கிரிக்கெட் போட்டியில் தோனியை காண முடியாத ரசிகர்கள் குதிரையுடனான ஓட்ட பந்தயத்தில் அவரை கண்டு ரசித்து வருகின்றனர்.

பக்கம் 1 / 90