- ஆன்மீகம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 595
பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள், மீண்டும் மறுநாள் கண்விழித்து எழுவது என்பதே ஒரு மறுபிறவி போன்றதுதான். அதுவும் ஒரு உயிர் படைப்பு போன்றதுதான். அதனால்தான் ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.
செல்வம் நம் வீடுகளில் நிரம்பி வழிய லக்ஷ்மியை வணங்கி, அந்த அஷ்ட லக்ஷ்மி வீட்டில் குடியேற வேண்டுமெனில் நாம் பல வழிமுறைகளை செய்ய வேண்டும்.
முதலில் தினமும் விடியற்காலையில் எழுந்து நம் வீட்டின் வாசலில் பசு மாட்டு சாணம் தெளித்து அதன் பின் தவறாமல் கோலம் போட வேண்டும். அடுத்தாக அதிகாலையிலே நீராடி இறைவனை வணங்கி அதன் பின் சமைக்க வேண்டும்.
தினமும் காலை சூரிய பகவானை வணங்க வேண்டும். தேவாரம், திருவாசகம் பாடல், கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் வாசித்தல் வேண்டும். மேலும் அன்னதானம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையேனும் வீட்டை கழுவி விட வேண்டும்.
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும். மேலும் வீட்டின் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் அஷ்ட லக்ஷ்மி குடியேறி மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள்.
ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான், 'யுகாதி பண்டிகை'. இந்தப் பண்டிகை, 'உகாதி' என்றும் அழைக்கப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்த நாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. `சைத்ர மாதத்தின் முதல் நாளான இன்றுதான் பிரம்மதேவர் யுகத்தைத் தொடங்கினார்’ என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தருமபுரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் யுகாதிப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. மராட்டிய மக்கள் 'குடிபாட்வா ' என்றும், சிந்தி இன மக்கள் 'சேதி சந்த்' என்றும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம்.
ஆண்டின் முதல் நாளான இந்த நாளில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனப்படும் பஞ்ச அங்கங்களையும் கூறும் பஞ்சாங்கத்தினை படிக்கும் வழக்கம் பெரியோர்களிடம் இருக்கிறது. நாட்டின் நிலைமை, விளைச்சல், மக்களின் வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் இந்த நாளில் பஞ்சாங்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது. சிலர் ஜோதிடரிடம் சென்று குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நன்மைகளையும் அறிந்து கொள்வார்கள். ஆலய வழிபாடும், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரிசளிப்பதும் இந்த நாளில் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது.
யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.
புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனியின் இறுதி நாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் ‘‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருட கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.
சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் ராசி என்ற குறிப்பு இருக்கிறது. திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” (வரி 160-161”) தமிழ்ப் பஞ்சாங்கங்களில், ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் என்ன செய்கிறோம். வீடு, வாசலைச் சுத்தம் செய்கிறோம். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்து வழிபடும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது. அதிகாலையில் நீராடி , புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், அநேகமாக எல்லாக் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதும் வழக்கம்.
அன்றைய சமையலில் வடை பாயசம் இருந்தாலும், வேப்பம்பூ பச்சடியும், மாங்காய்ப் பச்சடியும் சமைப்பது மரபாகும். சித்திரையில் மா மரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. வாழ்க்கையின் ஆழத்தையும் இயல்பையும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை, இந்த சமையல் குறிப்பே உணர்த்திவிடும்.
இந்த சித்திரை மாதம். திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். ஒரு சித்திரையில் பள்ளிக்கூடம் சென்றிருப்பீர்கள்.
ஒரு சித்திரையில் ஏதோ ஒரு துக்க நிகழ்வு நடந்திருக்கும்.ஒரு சித்திரையில் திருமணம் நடந்திருக்கும். எல்லாம் ஒரே சித்திரை அல்ல.
இதோ இந்த ஆண்டு பிலவ ஆண்டு. அறுபது வருட சுழற்சியில் 35 வது ஆண்டு. இந்த ஆண்டும் திரும்பத்திரும்ப வரும். ஆனால், இந்த பிலவ ஆண்டை அதிகபட்சம் மனித வாழ்க்கையில் ஒருமுறைதான் திரும்பவும் சந்திக்க நேரும்.
60 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை முதல் முறையாகச் சந்திக்கிறார்கள். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை இரண்டாம் முறையாகச் சந்திக்கிறார்கள். மூன்றாம் முறையாகவும் இந்த பிலவ ஆண்டைச் சந்திக்க வேண்டும் என்றால், ஆயுள் 120 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமற்றது.
நாம் மனிதர்களை வாழ்த்தும்பொழுது. அதிகபட்சம் 100 ஆண்டுகள் வாழ்க. என்று வாழ்த்துகின்றோம்.
கார்காலத்தில் மழை பெய்யும். பனிக்காலத்தில் பனி பெய்யும். கோடைகாலத்தில் வெயிலடிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிரும். வசந்த காலத்தில் இலைகள் மறுபடியும் பிறக்கும். இது ஒரு சுழற்சிமுறை. காலம் யாரையும் ஏமாற்றுவது கிடையாது.
காலம் கடந்த பின்னும் ஒருவரை நிலை நிறுத்துவது தெய்வபலமும், தெய்வபலத்தின் அடிப்படையில் அவன் செய்த செயல்களும். காலத்தைக் கட்டுப்படுத்துகின்ற அந்தத் தெய்வத்தைத் துதிப்போம். புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
பக்கம் 1 / 15



