கணினி வல்லுநரா நீங்கள்?

SOCIAL SHARE
Pin It

ஒருங்கிணைந்த மேம்படுத்தும் சூழல், பதிப்பு கட்டுபாட்டு அமைவு, உரைபதிப்பான்கள், இணையபக்கங்களையும் செல்லிடத்து பேசியின் பக்கங்களையும் உருவாக்கி பராமரித்திட உதவிடும் வரைச்சட்டங்கள் ஆகியவற்றிற்கான மேம்படுத்திடும் பிரபலமான கட்டறற கருவிகள் பின்வருமாறு:

1. Git துசிறிய செயல்திட்டமுதல் பெரிய திட்டம் வரை அதன் உறுப்புகள் ஒவ்வொன்றையும் மிகவிரைவாக வும் திறனுடனும் கையாளும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற வழங்குதலின் பதிப்பை கட்டுபடுத்திடும் அமைவு வடிவமைப்பாகும் பெரும்பாலான மென்பொருள் உருவாக்குபவர்கள் தங்களின் பயன்பாடுகளின் பதிப்பை கட்டுபடுத்திட இந்த கிட் என்பதையே முதல் விருப்பமாக தேர்வுசெய்கின்றனர் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் லிங்காடின் நெட்ஃபிக்ஸ் போன்ற தொழில் ஜாம்பாவான்கள் அனைவரும் இந்த கிட் என்பதையே தங்களின் செயல்திட்டத்திற்கு பயன்படுத்திகொள்கின்றனர் இது கற்பதற்கும் கற்றபின் அதனை பின்பற்றி செயல்படுத்து வதற்கும் மிக எளிதானதாக விளங்குகின்றது

2. Eclips கணினியின் மென்பொருள் உருவாக்கத்தின் போதான ஒருங்கிணைந்தமேம்படுத்தும் சூழலை (IDE) கொண்டுவருவதற்கு இந்த எக்ளிப்ஸ் பேருதவியாக விளங்குகின்றது .மேலும் இது பெரும்பாலும் ஜாவாவின் ஐடிஇக்கு பயன்படுத்தப்படுகின்றது மேலும் இது சி, சி++,பிஹெச்பி போன்ற கணினி-மொழிகளை ஆதரிக்கின்றது இது குறிமுறைவரிகளின் தரத்தையும் பதிப்பு எண் கட்டுபாட்டையும் இதர ஒருங்கிணைந்த சூழலையும் வழங்குகின்றது 250 இற்கு மேற்பட்ட கட்டற்ற செயல்திட்டத்தினை இது ஆதரிக்கின்றது

3. Node.js இது சேவையாளர் சார்ந்த பயன்பாடுகளை உருவாக்குவதில் மிகமுக்கிய பங்காற்றுகின்றது தற்போது யாகூ, பேபால், வால்மார்ட், ஐபீஎம், மைக்ரோசாப்ட் ஆகிய பிரபலபமான நிறுவனத்தின் சேவையாளர் சார்ந்த பயன்பாடுகளை உருவாக்குவதில் இது முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றது

4. Cordovaஎன்பது செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிட பேருதவியாக இருக்கின்றது மிகமுக்கியமாக ஐஓஎஸ் ,ஆண்ட்ராய்டு, விண்டோ போன்ற கைபேசி தளங்களில் ஹெச்டிஎம்எல் ,சிஎஸ்எஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணைய பயன்பாடுகளை உருவாக்குவதற்கு பயன்படுகின்றது மிகமுக்கியமாக ஃபோன்கேப் என்பதன் கைபேசி பயன்பாடுகளின் வரைச்சட்டமாக இதனுடைய குறிமுறைவரிகளே விளங்குகின்றன

5. Emacs இது பயன்பாடுகளின் உள்ளிணைக்கப்பட்ட உதவி ஆவணங்களை உருவாக்குவதிலும் அப்பயன்பாடுகளின் பயிற்சிகளை உருவாக்கவதிலும்உள்ளடக்கத்தில் திருத்தம் செய்வதிலும் நாம் பேசும் மொழிகளின் எழுத்துகளுக்கான ஒருங்குகுறியை பராமரிப்பதிலும் மிகமுக்கிய மைல்கல்லாக விளங்குகின்றது சுயமான ஆவணங்கள் வாடிக்கையாளர் விரும்பியவாறான ஆவணங்களை உருவாக்குவது ஆவணங்களை உருவாக்கிடும்போது அதில் திருத்தம் செய்வது ஆகிய வசதிகளை மென்பொருள் உருவாக்குநருக்கு இது வழங்குகின்றது

6. Vimஎன்பது மற்றொருமிகமேம்பட்டதிறமையானஉரைபதிப்பானாக பயன்படுகின்றது இது கட்டளைவரிகள்முதல் வரைகலை பயனாளர் இடைமுகப்பு வரை எந்தநிலையிலும் பயன்பாடுகளின் உதவிக்குறிப்புகளின் உரையை திருத்தம் செய்திடவும் நூற்றுகணக்கான கணினிமொழிகளை ஆதரிக்கும் வசதிகொண்டதாக உள்ளது.

7. ASP.NETஎன்பது சேவையாளர் சார்ந்த இயக்கநேர இணையபன்பாடுகளை வடிவமைப்பதில பயன்படுகின்றது இதனை இயக்கநேர இணைய பக்கத்தையும் ,இணைய பயன்பாடுகளையும் ,இணைய சேவைகளையும் உருவாக்கி மேம்படுத்திட பேருதவியாய் விளங்குகின்றதுசி#,விபி.நெட் போன்ற கணினிமொழிகளைகொண்டும் விசுவல் ஸ்டுடியோ எனும் கருவியை கொண்டும் இணைய பயன்பாடுகளை உருவாக்கிட உதவுகின்றது.

8. Bootstrap என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற இணைய பக்கத்தின் இணைய பயன்பாடுகளின் முன்பகுதி (front end) வரைச்சட்டத்தினை வடிவமைத்திட பயன்படுகின்றது இணைய பயன்பாடுகளின் பொத்தான்கள் ,படிவங்கள் ,வழிகாட்டிகள் ,இதர இணையபக்கங்களின் இடைமுகத்தின் மாதிரிப் பலகத்தினை சிஎஸ்எஸ், ஹெச்டிஎம்எல்ஆகியவற்றின் துனையுடன் வடிவமைத்திட பேருதவியாய் விளங்குகின்றது மற்ற இணையவரைச்சட்டம் போன்றில்லாமல் இணையமுன்பகுதி(front end) வடிவமைப்பதில்முக்கிய பங்காங்காற்றுகின்றது.

9. Ruby on Rails இதுவும் இணைபக்கங்களின் சேவையாளர்சார்ந்த பயன்பாடுகளை உருவாக்கஉதவும் ஒரு வரைச்சட்டமாகும் ஒரு இணையச்சேவையின் தரவுதளங்கள இயல்புநிலை கட்டுபாட்டாளராக இது மிளிருகின்றது GitHub, Airbnb, Basecamp,Hulu போன்ற இணையச்சேவையாளர்கள் இந்த ரூபிஆன் ரெயிலையே தங்களின் சேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர் இதில் Convention over Configuration(CoC), don’t repeat yourself(DRY)ஆகிய கருத்தமைவுகளும் சேர்ந்தஇணையச் சேவையை வழங்குகின்றது.

Karisalmedia Admin