சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய திரிபு வகை, ஒரு புதிய நம்பிக்கையை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்துள்ளது.
விண்வெளியில் இருக்கும் வீரர்கள், தங்கள் தேவையான காய்கறிகளை தாங்களே பயிரிட்டு வளர்த்துக் கொள்ளலாம் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது
விண்வெளியில் நிலவும் தனித்துவமான சூழ்நிலையில், தாவரங்கள் வளர உதவும் எரிபொருளை உருவாக்க, இந்த புதிய பாக்டீரியா திரிபு வகை உதவக்கூடும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தலைமையில், தாவர வளர்ச்சியை மேம்படுத்தும் பாக்டீரியா மற்றும் தாவர நுண்ணுயிரிகளை ஆராய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அப்பா ராவ் பொடில், CSIR அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ராம்பிரசாத் ஆகியோர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
மெத்திலோபாக்டீரியாசி வகையில் சேர்ந்த இந்த பாக்டீரியா விகாரங்கள் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்யப்பட்டன
ஒரு திரிபு மெத்திலோரூப்ரம் ரோடீசியம் என அடையாளம் காணப்பட்டாலும், மற்ற மூன்று முன்னர் கண்டுபிடிக்கப்படாத புதிய இனத்தைச் சேர்ந்தவை.
மரபணு பகுப்பாய்வுகள் அவை மெத்திலோபாக்டீரியம் இன்டிகத்துடன் நெருக்கமாக தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்தின.













