வாட்ஸ் அப் எளிமையான செயலி என்றாலும், சில நேரங்களில் இதில் முன்பின் தெரியாத தொடர்புகளிலிருந்து வரும் மெசேஜ்கள் மற்றும் கால்கள் உள்ளிட்டவை நமக்கு தேவையற்ற தொல்லையை தருகின்றன. இதை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூடவே அறிமுகமில்லாத நபர்களின் தொந்தரவு உள்ளிட்ட பல தீமைகளும் இருக்கின்றன. தொல்லைகளில் இருந்து தப்பிக்க பயனர்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனமே செய்து கொடுத்துள்ள ஒரு வழி தான் பிளாக்கிங் கான்டேக்ட்ஸ் (blocking contacts) அம்சம்.
தேவையற்ற கான்டேக்ட்ஸ் மற்று மெசேஜ்களிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான ஒரு வழி இது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பாத கான்டேக்ட்ஸ்களை தடுப்பதே இந்த அம்சத்தின் நோக்கம். நீங்கள் ஒருவரை பிளாக் செய்யும் போது, அவர்களிடமிருந்து மெசேஜ்கள், கால்கள் அல்லது அவர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பெற மாட்டீர்கள். எனவே உங்களுக்கு வாட்ஸ்அப்பில் தொல்லை தரும் ஒரு தொடர்பை நீங்கள் பிளாக் செய்யலாம், அன்பிளாக் செய்யலாம்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனுக்கான WhatsApp-ல் ஒரு கான்டாக்ட்டை பிளாக் செய்வது எப்படி..
* முதலில் வாட்ஸ்அப்பை ஓன் செய்து கொள்ள வேண்டும்
* வாட்ஸ்அப்பில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை டச் செய்யவும்
* கீழ் தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்
* செட்டிங்ஸ் உள்சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தேர்வு செய்யவும்
* பின் Privacy சென்று அதில் Blocked contacts என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* மேல் வலது மூலையில் இருக்கும் Add optionஐ தட்டவும்
* இறுதியாக அதில் நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் கான்டேக்ட்டை தேர்வு செய்து சேர்க்கவும்
நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்புடன் முன்பே சேட் செய்திருந்தால் அல்லது தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தால், தொடர்பின் பெயரை தட்டுவதன் மூலம் அவற்றை நேரடியாக சேட்டில் பிளாக் செய்யலாம். கீழே ஸ்க்ரோலிங் செய்து பின் பிளாக் கான்டேக்ட்டை தட்டவும்.
அன்பிளாக் (unblock) செய்வது எப்படி.?
* முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து கொள்ள வேண்டும்
* வாட்ஸ்அப்பில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை டச் செய்யவும்
* கீழ் தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்
* செட்டிங்ஸ் உள்சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தட்ட வேண்டும்
* பின் தனியுரிமை ( Privacy) விருப்பம் சென்று அதில் பிளாக்ட் கான்டேக்ட்ஸ் (Blocked contacts) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பிளாக் செய்யப்பட்டிருக்கும் கான்டேக்ட்டை தட்டவும்
* பின் அன்பிளாக் செய்யவும்
IOS-ல்:
* ஃபோனில் இருக்கும் வாட்ஸ்அப் ஐகானை தட்டுவதன் மூலம் வாட்ஸ்அப்பை திறக்கவும்.
* உங்கள் திரையின் கீழ் வலது மூலையில் அமைந்துள்ள செட்டிங்ஸ் (Settings) ஐகானைத் தட்டவும்.
* செட்டிங்ஸ் மெனு சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
* பின் Privacy சென்று அதில் Blocked contacts என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* மேல் வலது மூலையில் இருக்கும் Add optionஐ தட்டவும்
* இறுதியாக அதில் நீங்கள் அன்பிளாக் (Unblock Contact) கான்டேக்ட்டை தேர்வு செய்து சேர்க்கவும்
மாற்று முறை:
நீங்கள் அன்பிளாக் செய்ய விரும்பும் தொடர்பின் முந்தைய சேட்டை ஓபன் செய்து, பின்னர் தொடர்பின் பெயரை தட்டி அன்பிளாக் செய்வதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம்.













