கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் - புராஜக்ட் ஸ்டார்லைன்

SOCIAL SHARE
Pin It

ஒரு ஆளை நேரே பார்த்து பேசும் உணர்வை, காணொலி அழைப்புகள் ஏற்படுத்துவதில்லை. எனவே, 'புராஜக்ட் ஸ்டார்லைன்' தொழில்நுட்பத்தின் மூலம், 'கூகுள்' அந்த இடைவெளியை நிரப்ப வருகிறது.ஒரு மாய ஜன்னலுக்கு இந்தப் பக்கம் நீங்கள். அந்தப் பக்கம் உங்கள் நண்பர். அவரது, உயரமும், அகலமும் அசல் அளவில், முப்பரிமாணத்தில் மறுபக்கம் திரையில் தெரியும்.நீங்கள் நேரில் பேசுகையில் செய்வதை போலவே, அவரது கண்களை பார்த்து பேசலாம். தோல், உடை, தலைமுடி என்று அனைத்தும் அதே நிறத்தில் தெரியும்.

இதனால், நேரிலேயே அந்த நபருடன் உரையாடி கொண்டிருப்பதை போன்ற உணர்வு ஏற்படுத்தும் கூகுள் ஸ்டார்லைட். சில கேமராக்களையும், உணரிகளையும் கொண்ட, 'பூத்' போன்ற பெட்டியில் அமர்ந்து பேச வேண்டும். இவை தவிர, மூன்று தொழில்நுட்பங்கள் இதில் இயங்குகின்றன. ஒரு தொழில்நுட்பம் பேசுபவரை அப்படியே, 'ஸ்கேன்' செய்யும். இன்னொன்று, அந்த தகவல்களை 'டிஜிட்டல்'முறையில் சுருக்கி இணைப்பு வழியே அனுப்பும்.

அடுத்த நுட்பம், முப்பரிமாணத்தில், அதே நபரின் உருவத்தை, முக பாவனை, உடல் அசைவுகளை மறுமுனையில் உள்ள பெரிய திரையில் காட்டும். இதனால், தற்போதுள்ள தொலைதொடர்பு வசதிகளை வைத்தே ஸ்டார்லைட் தொழில்நுட்பம் இயங்கும் என்பது தெளிவாகிறது. அதாவது கொரோனா யுகத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் இது.

ARUNACHALAM