பயன்படுத்திய மாஸ்க், பிபிஇ கிட்களை செங்கல்லாக மாற்றி இளைஞர் சாதனை

SOCIAL SHARE
Pin It

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க நாம் முகக்கவசங்களை பயன்படுத்துகிறோம். அதிலும், இரண்டாவது அலையின் தாக்கம்  அதிகமாக இருப்பதால், இரண்டு மாஸ்குகளைப் போடுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். 

மாஸ்க் போட்டால்தான் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு கவசங்கள், குப்பையில் வீசப்பட்ட பின் என்னவாகிறது? அது ஏற்படுத்தும் ஆபத்து என்ன? இதைப் பற்றிய கவலைகள் ஒருபுறம் அதிகரித்துள்ளது.

 முகக்கவசம் மட்டுமல்ல, பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் என தற்போது பிரபலமாகியிருக்கும், அனைவரும் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசங்கள் அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை அப்படியே குப்பையில் வீசப்பட்டு, சுற்றுப்புற சூழலின் மாசை அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?
 
மறுசுழற்சி செய்வது தான்… இந்தியாவின் 'மறுசுழற்சி நாயகன்' என்று அழைக்கப்படும் பினிஷ் தேசாய் 28 வயதே ஆனவர். இவர், உயிர் மருத்துவ கழிவுகளை குறிப்பாக ஒற்றை பயன்பாட்டு முகக்கவசங்கள், தலையில் போடப்படும் கவசம், பிபிஇ கிட், கையுறைகள் ஆகியவற்றை செங்கற்களாக மறுசுழற்சி செய்கிறார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board) அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் தினசரி சுமார் 609 மெட்ரிக் டன் சாதாரண உயிர் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. தற்போது கொரோனா பரவலால், இந்தியாவில் COVID-19 தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு சுமார் 101 மெட்ரிக் டன் (MT/day) உற்பத்தியாகிறது.  

கழிவுகளாக போடப்படும் பிபிஇ மற்றும் முகக்கவசங்களில் 52 சதவீதம், மூன்று சதவீதம் பைண்டர்கள் மற்றும் 45 சதவீதம் காகித கழிவுகள் சேர்த்து இந்த செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றான. இந்த செங்கற்களில், நீர் புகாது, தீப்பற்றாது, மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது.  

ஒவ்வொரு செங்கலும் 12 x 8 x 4 அங்குல அளவு கொண்டது, ஒரு சதுர அடிக்கு 7 கிலோ பயோமெடிக்கல் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பி-பிளாக் 1.0 உடன் ஒப்பிடும்போது இலகுவானது ஒரு செங்கல் உற்பத்திக்கு 2 ரூபாய் 80 காசுகள் அடக்க விலை ஆகிறது.  

 

ARUNACHALAM