ஆரம்பநிலைப் பயிற்சி மையங்கள்:
செவித்திறன் குறைபாடு என்பது மரபு வழியில் பொதுவாக ஏற்படும் குறைபாடுகளில் ஒன்றாக, 1000 குழந்தைகளில் 2 முதல் 4 குழந்தைகளிடம் இக்குறைபாடு காணப்படுகிறது. வயதிற்கேற்ற பேச்சுத்திறன், மொழித்திறன் அறியும் திறமை ஆகியவற்றின் வளர்ச்சியில் செவித்திறன் முக்கியமானதால், ஆரம்ப நிலையில் இக்குறைபாட்டினைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமானதாகும்.
எனவே செவித்திறன் பாதிக்கப்பட்ட மழலையர் மற்றும் இளஞ் சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், குழந்தைகள் 5 வயதை அடையும் முன்னரே போதிய பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி பெற்று 1-ஆம் வகுப்பில் சேருவதற்கு ஆயத்தமாகும் அளவிற்கு தீவிர பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்மையங்கள் 29 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றன. 2% வயதிற்கு குறைவுடைய செவித்திறன் குறையுடைய இதர ஊனம் ஏதும் இல்லாத குழந்தைகள் இம்மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். சேர்க்கைக்கு குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. பெற்றோரில் ஒருவர் குழந்தையுடன் மிகவும் துரிதமாக உள்ளதாகத் தெரிவிக்கிறது. செயல்திறன் பாதிப்புக்கு உட்பட்ட குழந்தைகள், குழந்தை பருவத்தில் பெறக்கூடிய வளர்ச்சி நிலையினை இழந்திடும் அபாயத்தினை ஆரம்ப நிலை பயிற்சி மூலம் தவிர்க்கலாம். இளங்குழந்தைகளுக்கு ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும் நோக்கோடு, ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் அவர்களின் தேவைகள், சிறப்புக் கல்வி, சிறப்புப் பயிற்சி போன்றவை இளங்குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர் / பாதுகாவலர் ஆகியோர் அவரவர் வீடுகளில் இருந்து ஆரம்பநிலை பயிற்சி மையங்களுக்கு வந்து திரும்பிச் சென்றிட அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்திட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.10,000/- வழங்கப்படுகிறது.
ஆரம்பநிலை பயிற்சி மையத்திற்கு வருகை தருவது அவசியமாகும். இம்மையங்களில் 263 ஆண் மற்றும் 229 பெண் குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். 55 சிறப்பாசிரியர்கள் இம்மையங்களில் பணிபுரிகின்றனர்.













