மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் -

SOCIAL SHARE
Pin It

பார்வையற்ற மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கும் திட்டம்
 
கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு வாசித்து காட்டுபவா்களுக்கு ஆண்டிற்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.3000-பட்ட வகுப்புகளுக்கு ரூ.5000- மேல்நிலை பட்ட வகுப்புகள் / தொழில்நிலை படிப்புகள் ரூ.6000-ம் வழங்கப்பட்டு வருகிறது
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்


 
குடும்ப அட்டை நகல்
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று
முந்தைய வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்
வங்கிகணக்கு புத்தக நகல் இணைக்கப்பட வேண்டும்
கல்வி உதவித்தொகை விண்ணபத்திலேயே வாசிப்பளாரின் விவரம் குறிப்பிடப்பட வேண்டும் 
 
சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுக்கான மான்யம்
 
வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த துறையிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். வயது 18க்கு மேல் 55 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மானியமாக கடன் தொகையில் 3-ல் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.10,000 இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும்.
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
குடும்ப அட்டை நகல்
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல்
புகைப்படம் – 2 
 
பார்வையற்றோருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை
 
பார்வையற்றவா் பணி மற்றும் சுயதொழில் நிமித்தமாக வெளியில் சென்று வர ஊக்குவிப்பதற்காக மாவட்டம் முழுவதும் செல்வதற்கு பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுகிறது.
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
தேசிய அடையாள அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
புகைப்படம் -3 
 
அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவிகிதம் கட்டண சலுகை
 
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பேருந்தில் சென்று வருவதற்காக
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
தேசிய அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் கொடுக்க வேண்டும்
 
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை
 
பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, பயிற்சி மற்றும் பணிக்கு இல்லத்தில் இருந்து செல்லும் மாற்றுத்திறனாளிகள் 100 கி.மீ வரை சென்று வருவதற்கு வழங்கப்பட்டு வருகிறது.
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
தேசிய அடையாள அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
புகைப்படம்-3
உரிய சான்றிதழ் 
துணையாளருடன் சலுகைக் கட்டண பேருந்து பயணத்திட்டம்
துணையாளா் துணையின்றி செல்ல இயலாத அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் துணையாளா் ஒருவருடன் நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகையில் பயணம் செய்வதற்கு வழங்கப்படுகிறது
 
மாற்றுத்திறனாளிகளால் சமர்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்
 
உரிய படிவத்தில் அரசு மருத்துவரின் சான்று பெற்று நகலினை நடத்துனரிடம் வழங்கப்பட வேண்டும்.
 
 
 
 
 

ARUNACHALAM