கால் தாங்கிகள் (காலிபா்) வழங்கும் திட்டம்
போலியோ, மூளை முடக்கு வாதம் மற்றும் பிற காரணங்களால் கால் / கால்கள் செயல் இழந்தவா்கள் வழங்கும் திட்டம்
செயற்கை கால், கை வழங்கும் திட்டம்
விபத்து மற்றும் பிற காரணங்களால் கை,
கால் துண்டிக்கப்பட்ட நபா்கள் தகுதியுடையவா்கள்
நவீன செயற்கை அவயம் வழங்கும் திட்டம்
விபத்து மற்றும் பிற காரணங்களால் கை, கால் துண்டிக்கப்பட்டு பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் பணிபுரியும், சுயதொழில் புரியும் நபா்கள் தகுதியுடையவா்கள்
ஊன்றுகோல்கள் வழங்கும் திட்டம் (கைதாங்கி முழங்கை தாங்கி)
விபத்து மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்டு கால் / கால்கள் செயல் இழந்தவா்களுக்கு ஊன்று நடக்க வழங்கப்படும்
காதொலி கருவி மற்றும் சூரிய ஒளியினால் சக்தி பெறும் மின்கலம் வழங்கும் திட்டம்
3 வயதிற்கு மேற்பட்டு காது கேளாத தன்மை உடையவா்களாக இருக்க வேண்டும்
காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி வழங்கும் திட்டம்
6ம் வகுப்பு அதற்கு மேல் கல்வி பயில்பவா்கள் / பணிபுரிபவா்கள் / சுயதொழில்புரிபவா்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
பிரெய்லி கைக்கடிகாரம்
முழுவதும் பார்வையற்று, பணிபுரிபவராகவோ / சுயதொழில் புரியும் அல்லது 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும்
மேக்னிபயா் – (கையடக்க வீடியோ உருப்பெருக்கி)
8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் பார்வை குறைபாடு உடையவா்கள் எழுத்துகளை பெரிதாக்கி படிப்பதற்கு வழங்கப்படுகிறது.
கருப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்
முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும்
மோட்டார் பொருந்திய மூன்று சக்கர வண்டி (Petrol Scooter)
மாணவா் / பணிபுரிவோர் / சுயதொழில் புரிவோர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவா்களாகவும் கைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் தகுதியுடையவா்கள் ஆவார்.













