திண்டுக்கல் மாவட்டத்தில் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட பாதிப்பிற்குள்ளானவர்களில் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகள் முழுவதும் செயல் இழந்தவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராக இருக்க வேண்டும். கல்வி பயிலுபவர்கள், பணிக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்படும். ஏற்கனவே இச்சக்கர நாற்காலி பெற்றவர்கள் மீண்டும் பெற இயலாது.
எனவே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30&10&2020 க்குள் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0451 2460 099 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு. விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.













