கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது. மண்டலங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு வாகனங்களுடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.வரும் 16 ம் தேதி தடுப்பூசி வழங்கும் பணியை முதல்வர் பழனிசாமி துவங்கி வைக்கிறார். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டு கொண்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி வரும். முதல் டோஸ் போட்டவுடன் மது அருந்தக்கூடாது. 2வது டோஸ் போடும் வரையில் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி போடும் நபர்களை தனிமைப்படுத்த வேண்டாம். தடுப்பூசி போட, அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.













