Editor's Choice

கேரளாவில் யானை ஒன்று மனிதர்களுடன் கிரிக்கெட் விளையாட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கண்ணுபிரேம் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் யானை ஒன்று தன் தும்பிக்கையில் தென்னை மட்டையால் ஆன ”பேட்” வைத்திருக்கிறது.

அங்குள்ள மனிதர்கள் அந்த யானைக்கு பந்துவீச யானை சிக்ஸரும் ஃபோருமாக அடித்து நொறுக்கியது. இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

"இன்சைட்  அவுட் கவரஸ். தும்பிக்கைக்கும் கண்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அற்புதம். அபார ஆட்டம் #Gannu #cricket #incredible" என்று சேவாக் இந்த வீடியோவில் எழுதியுள்ளார். 

இதற்கிடையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து யானை பேட்டிங் செய்ததைப் பாராட்டினார்.

அபாரமாக பேட்டிங் செய்யும் யானைக்கு இங்கிலாந்தின் பாஸ்போர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என கிரிக்கெட் வீர்ர வாகன் ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவில் உள்ள இந்த யானைக்கு ஆங்கில பாஸ்போர்ட் இருந்தால் பேட்டிங் லைன் அப் வலுப்பெறும் என கூறி கிண்டல் செய்துள்ளார். 

"நிச்சயமாக இந்த யானைக்கு ஆங்கில பாஸ்போர்ட் உள்ளது !!" என்று வாகன் ட்வீட் செய்துள்ளார்.

 

Editor's Choice

நியூயார்க்கில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்கள், குளிர்சாதன டிரக்குகளில் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

'கடந்த வருடம், கொரோனாவால் பலியான 750 பேரின் உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம். இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்' எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

'கொரோனா நோயாளிகளின் உடல்களை இவ்வாறு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. உடனடியாக அந்த உடல்களை புதைக்கவோ எரிக்கவோ வேண்டும்' என, மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ள கொரோனா எவரெஸ்ட் சிகரத்தையும் சென்றடைந்தது.

நேபாள  நாட்டில் இருந்து மலை ஏறுபவர்கள் மூலம், சீன தரப்பில் இருந்து மலை ஏறுபவர்களுக்கு, தொற்று பரவலாம் எனவும், அதனால், தொற்று பரவலை தடுக்க, எவரெஸ்ட் மலையில், எல்லைகளை பிரித்து காண்பிக்கும் வகையிலான கோடு வரையப்படும் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதை அடுத்து, உலகெங்கிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட,  நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து என கிட்டத்தட்ட  உலக இயக்கம் ஸ்தபித்தது எனலாம். 

அந்நிலையில், நேபாள அரசும், எவரெஸ்ட் மலைச்சிகரம் ஏற, அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுலா துறையை சார்ந்திருந்த பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.

நேபாளத்திலிருந்து மலையை ஏறும் ஏறுபவர்களிடையே பல கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

நிச்சயமற்ற கோவிட் காலங்களில் உலகின் மிகச் சிறந்த இடத்தில் வாழ்வது எப்படி இருக்கும்? உண்மையிலே சொல்லும் அளவிற்கு அது சிறப்பாக உள்ளதா?

இது பெரும்பாலும் உண்மைதான். சிங்கப்பூரில் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது.

சமீபத்திய மாதங்களில், அவ்வப்போது வெளிவரும் ஒருசில தொற்றுக்களை ஒடுக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக அளவில் தினசரி தொற்றுக்கள் கிட்டத்தட்ட ஏற்படுவதே இல்லை என்றே சொல்லலாம். ஆயினும் இந்த வாரத்தில் பல புதிய தொற்றுக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் உடனடியாக இறுக்கப்பட்டன.

கடுமையான பயண விதிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவை வெளியிலிருந்து வரும் தொற்றுக்களை உடனடியாக நிறுத்துகின்றன. உள்ளே வருபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அமல் செய்யப்பட்ட இரண்டு மாத "சர்க்யூட்-பிரேக்கர்" தவிர, ஒருபோதும் மீண்டும் பொதுமுடக்கத்தின் கீழ் இருக்கவில்லை.

வாழ்க்கை ஏறக்குறைய இயல்பாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் எனது குடும்பத்தினரை நான் சந்திக்க முடியும். கூடவே உணவகத்தில் நண்பர்களைச் சந்திக்க முடியும். ஆனால் எட்டு பேருக்கு மேல் இருக்க முடியாது. எல்லா இடங்களிலும், வெளியில் கூட முகக்கவசம் அணிவது காட்டாயமாகும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது சாப்பிடும்போது அவற்றை கழற்றலாம்.

பள்ளிகளும், குழந்தை பராமரிப்பு மையங்களும் திறந்திருக்கின்றன. வார இறுதியில் குழந்தைகளை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல முடியும். பல இடங்கள் சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக வருவோர் எண்ணிக்கையை குறைத்திருந்தாலும், வார இறுதிக்குத் திட்டமிடுவது என்பது ஒரு ராணுவப் பயிற்சிக்கு தயார் செய்வது போன்றது.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து எங்கள் மக்கள்தொகையில் சுமார் 15% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஆறு மில்லியன் பேர் மட்டுமே உள்ளனர். நன்கு செயல்படும் தன்மை, அரசின் மீது அதிக நம்பிக்கை மற்றும் தடுப்பூசி தயக்கம் குறைந்து வருவது போன்றவையே இதற்கான காரணங்களாகும்.

பாதுகாப்பாக இருக்கிறோம், சிறப்பாக செயல்படுகிறோம். கட்டாய முககவசம் அணிதல், தொடர்புகளை கண்டறியும் சிறப்பான வழிமுறை, பயணம் மற்றும் பெரிய கூட்டங்களுக்கு நீடித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இவற்றில் உதவியுள்ளன. அதேபோல், எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய எல்லைகள், பெரிய நிதி வளம் மற்றும் கண்டிப்புடன் கூடிய திறமையான அமைப்புமுறை போன்றவையும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

சிங்கப்பூரில் பலர், வெளியே சென்று வரும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை இப்படி இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சிறிய தங்குமிடங்கள் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் காரணமாக கடந்த ஆண்டு இவர்களிடையே நிறைய கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டன.

அவர்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே செல்ல விரும்பினால் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையங்களில் மட்டுமே பெரும்பாலும் அவர்கள் கலந்துபழக முடியும்.

சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாக பயணம் எளிமையானதாக இல்லை என்பதால் பலரும், தங்கக்கூண்டில் அடைப்பட்ட கிளியாக மாறியுள்ளனர்.

அருகிலுள்ள இந்தோனேசிய தீவுக்கு அல்லது அண்டை நாடான மலேசியாவின் எல்லை நகரங்களுக்கு வார இறுதி பயணமாக என்று வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதற்கு சிங்கப்பூரில் பலர் பழகியுள்ளனர்.

கடந்த ஆண்டு தோல்வியுற்ற முயற்சிக்குப் பிறகு சிங்கப்பூர், ஹாங்காங்குடன் ஒரு ட்ராவல் பப்பிளை திறக்கிறது என்ற செய்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால் இந்த வாரம் இரு நகரங்களிலும், சமூக தொற்றுக்கள் பதிவான பின்னர் நடப்பது நடக்கட்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

உலகின் சில பகுதிகளில் இந்த வைரஸ் எவ்வாறு காட்டுத்தீ போல பரவி வருகிறது என்பதைப்பார்க்கும்போது, சலிப்பு பற்றி புகார் செய்வது மடத்தனம்.

"சிங்கப்பூர் என்பது உலகமயமாக்கலின் பின்னணியில் வளமையடைந்த ஒரு நகரம். பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமக்கு  அதிக தார்மீக பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்."

ஆபத்தான உலகளாவிய தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளித்துறோம் என்று சிங்கப்பூரில் பலர் கூறுவார்கள்.

ஆனால் இந்தக்குமிழி எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடும். பொருளாதார மீட்சிக்காக நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளதுடன், சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில இடங்களிலிருந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் ஒரு நாள் உலகின் பிற பகுதிகளுடன் முழுமையாக மீண்டும் இணையும். அதுவே நமது கோவிட் மீட்சியின் உண்மையான சோதனையாக இருக்கும்.

Editor's Choice

கூகிள் போட்டோஸ் இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்றாகும். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்

கூகிள் போட்டோஸ் (Google Photos) தளத்தில் வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. 

2021  ஜூன் 1ம் தேதிக்கு முன்னதாக, பயனர்கள் பதிவேற்றிய  உயர் தரத்திலலான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள்,  15 ஜிபி கூகிள் கணக்கு சேமிப்பிடத்தில் கணக்கிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விலக்கு உண்டு. 

கடந்த ஆண்டு நவம்பரில், கூகிள் 2021 ஜூன் 1 முதல் கூகிள் போட்டோஸ் தளத்தில்  'உயர் தரமான' புகைப்படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலுகை நிறுத்தப்படும்  என்று அறிவித்தது.

ஜூன் 1, 2021 க்குப் பிறகு, நிறுவனம் கூகிள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே சேமிக்க வேண்டும், அதற்கு மேல் என்றால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இருப்பினும், உலகளவிலான பிக்சல் (Pixel ) பயனர்களுக்கு இது பொருந்தாது என கூகிள் கூறியுள்ளது. நீங்கள் ஒரு பிக்சல் சாதனம் வைத்திருந்தால், Google போட்டோஸில் வரம்பற்ற வகையில்  இலவச உயர்தர புகைப்படங்களை சேமிக்கலாம்.

ஜூன் 1, 2021 முதல், உயர்தர உள்ளடக்கம் சேமிக்கப்படும். ஆனால் உங்கள் Google போட்டோஸ் அதன் சேமிப்பிடத்தை கணக்கிடும்.

மேலும், உங்கள் சேமிப்பக வரம்பை அடைந்ததும், கூடுதலாக புகைப்படங்களை சேமிக்க வேண்டும் என்றால், நீங்கள் Google One  என்பதற்கான சந்தாவை செலுத்தி இணையலாம்.  புகைப்படங்களில் இலவச சேமிப்பக ஆப்ஷனை தொடர, சில தேவையற்ற உள்ளடக்கத்தை நீக்கலாம்.

தற்போதுள்ள கூகிள் புகைப்படங்கள் பயனர்கள் தங்களது எல்லா படங்களையும் வீடியோக்களையும் இப்போதே உயர் தரத்தில் பதிவேற்ற வேண்டும்.

கூகிள் போட்டோஸ், 16 மெகாபிக்சல்கள் வரை புகைப்படங்களையும் 1080p ரெசல்யூஷன் வரை உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை சேமிக்க அனுமதிக்கிறது.

Editor's Choice

உலகம் முழுவதுமே கொரோனா பரவலின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

தொற்று பரவலை தடுக்க ஜப்பான் அரசு, டோக்கியோ, ஒசாகா க்யோட்டா, ஹ்யோகோ ஆகிய பகுதிகளில் அவசரகால நிலையை மே இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த இன்னும் சாத்தியக்கூறு இருப்பதாக கூறுகிறார்.

அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த போதிலும், டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற முக்கிய நகரங்களில் புதிய பாதிப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஜூலை 23 ஒலிம்பிக் விளையாட்டு  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிகஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இப்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடப்பதாக திட்டமிட்டிருந்த  ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக  பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி ஜப்பான் அரசுக்கு  ஆன்லைன் மூலம்  2,30,000 க்கும் மேற்பட்டோர் மனுவை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் மற்ற நாடுகளைப் போல தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்படவில்லை. ஆனால் அதன் தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. ஜப்பானில் உள்ள 12 கோடியே 60 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 2% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பக்கம் 26 / 90