Editor's Choice

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. 

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பது தொடர்பாக ஹவாய் தீவில் வாழ்ந்து வரும் வைதேகி அம்மையார் என்பவர் தொடர்ந்து பேசி வந்தார்.

இவர் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள `தமிழ் இருக்கை அறக்கட்டளை' என்ற அமைப்பு களமிறங்கியது.

இதற்காக 42 கோடி ரூபாய் வரை தேவைப்படவே, மூன்றாண்டுகளாக இதற்கான முயற்சியில் உலக தமிழர்கள் இறங்கினர். 42 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் டாலர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான முயற்சிகளில் தமிழ் இருக்கை அறக்கட்டளை, கனடா தமிழ்க்கழகம் ஆகிய இரண்டும் களமிறங்கின.

நன்கொடைகளால் தேவையான நிதி சேர்ந்து விட்டதால் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது. இன்னும் சில நாள்களில் இது குறித்த அறிக்கையினை டொரன்டோ பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது.

`தமிழ் இருக்கைகள் அமைவதனால் என்ன பலன்?'  என தமிழ் இருக்கைகளின் குழு ஆலோசகரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான கோ.பாலச்சந்திரன் கேட்டபோது...

``தமிழ் மொழி மற்றும் தமிழரின் வாழ்வின் பண்பாட்டுப் பழைமையைக் காட்டுவதற்கு மூன்று ஆதாரங்கள் உள்ளன. ஒன்று பழந்தமிழ் இலக்கியம். அடுத்து தமிழர்கள் கடலோடிகளாக வாழ்ந்த வணிகத் திறமை, மூன்றாவது தமிழ் இசை ஆகியவை. இதில், ஹார்வர்டு தமிழ் இருக்கையானது, சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஹ்யூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் நோக்கங்களில் ஒன்றாக தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தலைசிறந்த வணிகக் குழுக்களாகத் திகழ்ந்ததற்கான காரணிகளை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட உள்ளது.

அதில், தற்போதுள்ள சூழலில் உலக வணிகத்தின் ஒரு பகுதியை ஆள்பவர்களாக மீண்டும் தமிழர்கள் வர முடியுமா எனவும் ஆராய்வது முக்கிய இலக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாரசீகர்கள், சீனர்கள் ஆகியோருக்கு மத்தியில் எப்படி தமிழர்களால் இந்துமகா சமுத்திரத்தை வணிக ஆட்சி நடத்திய மூன்று இனங்களில் ஒன்றாக மிளிர முடிந்தது என்பதை இந்த இருக்கை ஆராயும். அடுத்து, டொரோன்டோ தமிழ் இருக்கையானது, தமிழ் இசையின் பழைமை மற்றும் அதன் சிறப்பு ஆகியவவை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டுமென பல்கலைக்கழகத்துக்குத் தெரிவிக்க இருக்கிறோம்.

இதன்மூலம் பழைமைத் தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்த பண்பாட்டுச் செழுமை தெரிய வரும். இன்றைய தமிழருக்கு அவர்களைப் போல் உயரும் ஊக்கத்தினை அளிக்கும். அதனால் தொடர்ந்து எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்வதற்குத் தமிழர்கள் முயல்வார்கள் என்பது  எண்ணம்" என தெரிவிக்கிறார் பாலச்சந்திரன்.

Editor's Choice

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி, ஏற்கனவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். IPL-லிலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் தோன ஆடுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ன. CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் 2022 ஆம் ஆண்டின் CSK போட்டிகளிலும் தோனியே அணியை வழிநடத்துவார் என்பதை உறுதிப்படுத்திய போதிலும், தோனிக்குப் பிறகு யார் என்ற கேள்வி அவ்வப்போது கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரகயான் ஓஜா, அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது உள்ள கேன் வில்லியம்சன் பெயரை அவர் எடுத்துள்ளார். SRH அணியால் பயன்படுத்தப்படாமல் உள்ள கேன் வில்லியம்சன் தோனிக்குப் பிறகு அவருக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார் என அவர் எண்ணுவதாகக் கூறியுள்ளார். தோனிக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாதான் CSK அணியின் கேப்டனாக இருப்பார் என்ற ஊகம் உள்ள நிலையிலும், ஜடேஜா துணை கேப்டனாக இருப்பார் என்றே ஓஜா கருதுகிறார். 

ஐபிஎல்லில் தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆடிக்கொண்டிருக்கும் CSK அணி, இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

“கடந்த 8-10 ஆண்டுகளாக  வீரர்களை அடிக்கடி மாற்றுவதில்லை என தோனி கூறியுள்ளார். எங்களுடன் நீண்ட நாட்களாக ஆடும் வீரர்களுக்கே எங்கள் அணுகுமுறையை நன்றாக புரிந்துகொள்ள முடியும். வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அணியில் இலக்கு, நோக்கம் ஆகியவற்றுடன் வீரர்களின் கண்ணோட்டமும் முழுமையாக ஒத்திசைந்து உள்ளது. வாய்ப்பு கிடைக்காவிட்டால், யாரும் சோர்ந்து போவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை நிரூபிக்க தயாராக காத்திருக்கிறார்கள். அதுதான் இந்த அணியின் பலமாக உள்ளது" என்று வெற்றிக்குப் பிறகு கூறினார் தோனி.

Editor's Choice

மைக்கேல் ஜோர்டான் அணிந்த காலணிகள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. 

சிவப்பு மற்றும் வெள்ளை "ஏர் ஜோர்டான் 1" ஸ்னீக்கர்கள்,100,000-150,000 சுவிஸ் பிராங்குகள் என்ற விலைக்கு விற்கப்படலாம். இந்த விலைக் கணிப்பை Sotheby ஏல நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜோர்டானின் ரூக்கி அணிந்திருந்த இதே போன்ற காலணிகள் ஆனால், அதில் அவரது ஆட்டோகிராப் இருந்தது. அந்த ஸ்னீக்கர்கள், ஆன்லைன் ஏலத்தில் 560,000 டாலர் (463,380 பவுண்டுகள்) என்ற அளவில் விற்று சாதனை படைத்தது.

1984-85 ஆம் ஆண்டில் என்.பி.ஏ சாம்பியன் மைக்கேல் ஜோர்டான் தனது சிகாகோ புல்ஸ்  அணியில் இணைந்தபோது தொடக்கத்தில் பயன்படுத்திய ராசியான ஜோடி சிவப்பு ஸ்னீக்கர்கள் அவை. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆன்லைன் ஏலத்தில் 100,000-150,000 சுவிஸ் பிராங்குகள் ஏலத்தில் போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

ஜோர்டானின் ரூக்கி பருவத்தில் இருந்து விளையாட்டு அணிந்த ஸ்னீக்கர்கள், இதே போன்றே இருந்தாலும், அவரது ஆட்டோகிராப்பைத் தாங்கியிருந்தததால், ஆன்லைன் ஏலத்தில் 560,000 டாலர் என்ற சாதனை விற்பனையை செய்ததாக சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

தோல் மற்றும் ரப்பரால் செய்யப்பட்ட காலணிகள், 13 மற்றும் 13.5 என்ற அளவில் உள்ளன. நைக் காலணி உற்பத்தி நிறுவனத்தின் படைப்பாக்க இயக்குனர் பீட்டர் மூர் வடிவமைத்த காலணிகள் இவை என சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

இந்த காலணிகள், ஜோர்டான் புல்ஸ் உடன் 13 சீசன்களில் விளையாடியது, ஆறு சாம்பியன்ஷிப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Editor's Choice

நடிகை ரோஜாவுக்கு கர்ப்ப பையில் கட்டி இருந்ததால் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கர்ப்ப பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

‘ரோஜாவுக்கு இரண்டு ஆபரேசன்கள் நடந்துள்ளன. கடந்த வருடமே இந்த ஆபரேசன் நடக்க வேண்டி இருந்தது. தேர்தல் மற்றும் கொரோனா காரணங்களால் நடக்கவில்லை. தாமதம் ஏற்பட்டதால் பிரச்சினையாகி விட்டது. இப்போது பெரிய அளவில் ஆபரேசன் நடந்தது. எல்லோரது பிரார்த்தனையாலும் ஆபரேசன் முடிந்துள்ளது' அவரது கணவர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு ரோஜா பூரண குணமடைந்து உள்ளார். ஒருவாரம் ஓய்வில் இருந்த அவர், தற்போது தனது மகள் அன்சுமாலிகாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 
 
Editor's Choice

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகே திபெத்தில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் அணைகட்டை சீனா கட்டமைக்க திட்டமிட்டு  வரும் நிலையில், பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அணைக்கட்டு திட்ட கனவு தகர்ந்து விடலாம் என  சீன பொறியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பிரம்மபுத்ரா கிராண்ட் கேன்யன் பகுதியில் அமைய போகும் இந்த அணை, வரலாற்றில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாக இருக்கும் என்றும் சீன அதிகாரி  தெரிவித்தார். அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள திபெத்தின் மாவட்டம்தான்  மடோக் ஆகும். இந்த பெரிய அணை கட்டும் திட்டம் சீனாவின் 14 வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.  கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீன நாடாளுமன்றம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

உத்தேசிக்கப்பட்டுள்ள அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால்,  நிலச்சரிவு காரணமாக அணை பாதிக்கப்படலாம் என பொறியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர், 'பனிப்பாறைகள் உருகி அப்பகுதியின்  திட்டத்தை சீர்குலைக்கலாம் என ஹாங்காங்கின் 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. 2018 ஆம் ஆண்டில்,  பனிப்பாறைகள் உருகி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மில்லின் கவுண்டியில் உள்ள செடோங்பு பேசின் அருகே உள்ள யர்லுங் செங்போ என்ற பிரம்மபுத்ரா ஆற்றின் மேல் நீரோடையை பெரிதும் பாதித்தது. இது 600 மில்லியன் கன மீட்டர் அளவிலான நீர்த்தேக்கத்தை உருவாக்கியது. தற்போது, ​​அதற்கு மேலே ஓடும் நதியில் அணை கட்டப்பட்டால், அணை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என பொறியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Editor's Choice
ஜெர்மனி மருத்துவமனையில் பெண் ஒருவர் 4 பேரை கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜெர்மனி போட்ஸ்டம் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய 51 வயதான பெண் ஊழியர், நோயாளிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
அவர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 5 பேரை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.  ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த போலீசார், அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பக்கம் 34 / 90