திட்டத்தின் நோக்கம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.
திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1989
17.05.2011 க்கு முன்பாகரூ25000/-மற்றும்ரூ50000/-காசோலை மட்டும் வழங்கப்பட்டது. (17.05.2011 முதல் ரூ25,000/ ரூ50,000 நிதியுதவியுடன் 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படுகிறது)
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்
ஏழைக்குடும்பமாக இருத்தல்வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெற இயலும்.
திருமணத்தின் போது மணப்பெண் 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைத்திருந்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.
மணப்பெண்ணின் கல்வித்தகுதி
திட்டம்-1
மணப்பெண் 10-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்து (தேர்ச்சி அல்லது தோல்வி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக்கல்வி மூலம் படித்திருந்தால்10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருத்தல் வேண்டும்.
பழங்குடியினராக இருந்தால் 5ம் வகுப்பு வரை படித்திருத்தல் வேண்டும்.
திட்டம்-2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்
பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்
வருமான சான்றிதழ் (ரூ72,000/-க்குள்)
சாதிச்சான்று
திருமண அழைப்பிதழ்
மணமகள் கல்வி மாற்றுசான்றிதழ்
மணமகள் மதிப்பெண்பட்டியல்–பட்டய சான்றிதழ் (Provisional or convocation)
குடும்பஅட்டை
மணமகன் மாற்று சான்றிதழ்
மணமகள்,மணமகன் மற்றும் தாய்(அ)தந்தை புகைப்படம்
வங்கி கணக்கு புத்தகம்
தாய் தந்தை ஆதார் கார்டு
நிதி உதவியின் அளவு(17.05.2011முதல்)
திட்டம்-1
ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம், 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்
திட்டம்-2
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்
விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.













