இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4- ஆம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 33 ரன்கள் முன்னிலை பெற்று இருந்ததால், 4-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 5, தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 4-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மழை காரணமாக ஆட்டம் சீக்கிரமாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் முடிந்து ஓய்வறைக்குத் திரும்பிய முகம்மது சிராஜை பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்றிருந்த பும்ரா, கட்டியணைத்துப் பாராட்டினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.













