பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும். செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி பூஜை செய்தால் மகிழ்ச்சி அடைகிறார். எனவே தாமதம் என்ன, இதைனை பின்பற்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும்
(1) வெள்ளிக்கிழமை அன்னை லட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை முறையாக வணங்கத் தொடங்குங்கள். தேவிக்கு இளஞ்சிவப்பு பூக்களை கொண்டு பூஜியுங்கள். ரோஜா பூக்கள் அன்னை லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவை.
(2) அன்னையை வழிபட, ஸ்ரீலட்சுமி சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீலலதா சகஸ்ரநாமம் ஜபிக்கலாம் அல்லது ஸ்ரீசுக்தம் பாராயணம் செய்யலாம். தாமரைக்காசுகளை வைத்து பூஜிக்கலாம். (108 காசுகள்).
(3) வீட்டில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மணம் நிறைந்த சூழல் இருக்க வேண்டும்.
(4) சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது ஒருபோதும் தூங்க வேண்டாம்.
(5) முடிந்தவரை தானம் செய்யவும். பசு அல்லது நாய்க்கு உணவளியுங்கள். யாசகம் கேட்டு வருபவருக்கு உணவு கொடுங்கள்.
(6) வடகிழக்கில் அழுக்கை சேர விடாதீர்கள்.
(7) வீடு, கடை- தொழிற்சாலையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஈசான மூலையை மூட வேண்டாம். அங்கே மணம் நிறைந்த பூக்களை வைக்கலாம்.
(8) துடைப்பத்தை யார் கண்களும் படாத ஒரு இடத்தில் வைத்திருங்கள்.
(9) சுத்தமான ஆடைகளை அணியுங்கள். வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள்.
(10) வீடு முழுவதையும் தூய்மையாக வைத்திருங்கள். தினமும் ஒரே நேரத்தில் கடவுளை வணங்குங்கள்.













