பெரியோர்களுக்கான டயட் டிப்ஸ்

SOCIAL SHARE
Pin It

வருடம் தோறும் ஒரு வயது கூடிக் கொண்டேயிருக்கிறது. வயதாவதை தடுத்து நிறுத்தும் சக்தி நம் கையில் இல்லை. ஆனால் உடல் நிலையை ஆரோக்கியமாய¢ வைத்துக் கொள்வது நம் கையில் இருக்கிறது. 

நாம் நம் காரை எவ்வித கோளாறுகளும் இன்றி வைத்திருக்க அதிக அக்கறை காட்டுகிறோம். நம் வீட்டை சரியாய் வைத்திருக்க அதிக அக்கறை காட்டுகிறோம. ஆனால் நம் உடலுக்குப் போதிய முக்கியத்துவம் தருவதில்லை. நம் உடலும் ஒரு இயந்திரத்தைப் போல்தான் என்பதை மறந்து விடுகிறோம்.



ஒரு விசயம், நம் உடலுக்குக் கெடுதல் தரும் பழக்கம் என்றாலும், அதை நாம் கைவிட உடன்படுவதில்லை. நம் உடலுக்கு கெடுதல் தரும் எல்லாவித காரியங்களையும் செய்கிறோம். மது அருந்துதல், புகைத்தல, போன்ற பழக்கங்களை பலர் இறுதிவரை விடுவதே இல்லை. சரியான உணவுப் பழக்கத்தையும் கடைப்பிடிப்பதில்லை. 

உடலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வதன் முதல் படி. சத்துள்ள உணவினை உண்பதுதான். 

நமக்கு வயதாகும்போது, மாறுவது நம் உடலின் தோற்றம் மட்டுமல்ல.. அதன் உறுப்புகளின் செயல்பாடும் மாற்றம் அடைகின்றன. உணவுகளை ஜீரணம் செய்ய நேரம் அதிகம் எடுத்துக் கொள்கின்றன.பசியும், தாக உணர்வும் கூட குறைந்து போகின்றன. 

வயதானவர்களிடை பொதுவாக காணப்படும் பிரச்சனைகள் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், போலிட் குறைபாடு போன்றவை.

மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்கும். 

சத்து மிகுந்த ஆரோக்கிய உணவினை உட்கொள்ள வேண்டும். சில வகை உணவுகள் வயதானவர்களுக்கு நல்ல சத்தினை வழங்குவதாக இருக்கிறது. குறிப்பாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள் போன்றவை ஆரோக்கியத்தை பேணும் உணவுகளாகும். அதே போல் உணவில் உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்வது நல்லது- 

தண்ணீர்

தண்ணீர் உணவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வயதானபின் தாக உணர்வு குறைவதால உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடித்தே ஆகவேண்டும். நம் உடலில் முக்கால் பாகம் நீரால் ஆனதுதான். உடலில் நீர் குறையும் போது சோர்வு ஏற்படும். அதே போல் உடல் சூடும் அதிகரிககும். 

அசைவ உணவு உண்பவர்கள் மீன் உண்பது நலலது. அதில் சாலமன், சார்டின், மெக்ரெல் போன்ற வகை மீன்களில் அதிக சத்துப் பொருட்கள் உள்ளன. வாரத்தில் இரண்டு முறையாவது மீன் சாப்பிடலாம். ஒமேகா 3 சத்து இதில் உள்ளது. 

வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். 

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானிய வகைகள், பழங்கள் யாவும் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. மலச்சிக்கல் பிரச்சனைகளை தடுக்கின்றன. உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. இருதயத்தை பலப்படுத்துகிறது. தொற்று நோயைத் தடுக்கிறது. 

மதிய உணவில் மோர் தயிர் சேர்த்துக் கொள்வது நலலது. தயிரில் உள்ள கால்சியம் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது. வைட்டமின் டி சத்து தயிரில் அதிகம் உள்ளது. 

தக்காளியை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். நுரையீரலை வலுப்படுத்துகிறது. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்ற்ல் தக்காளிக்கு உண்டு. புரோகோலியை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். 

சிவப்பு வொய்ன் வாரம் ஒருமுறை அருந்தி வரலாம். ரத்தக் கொதிப்புக்கு நல்லது. 

பாதாம் முந்திரி போன்ற கொட்டை வகைககளை வாரம் ஒரு அவுன்ஸ் அளவு உண்பது நல்லது. 

சத்துள்ள உணவுகளை அறிந்து உண்பதும். தினசரி அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால், வயதானாலும், சுறு சுறுப்பாக உற்சாகமாக செயல்பட முடியும். 

 

ARUNACHALAM