கருணைக் கிழங்கிற்கு அப்படி ஏன் பெயர் வந்தது தெரியுமா? ஏனென்றால் இது உடலுக்கு எந்த பிரச்சினையையும் தராது. இருக்கின்ற பிரச்சினைகளை சரி செய்யும் கருணைக் கிழங்கு உடலில் எந்த நோயையும் தங்க விடாது
அந்தக் கருணைக்கிழங்கு உடல் எடையை எப்படிக் குறைக்கிறது இன்னும் என்னென்ன மாயங்களைச் செய்யும் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்..
கருணைக்_கிழங்கு சாப்பிடுவதால் நமக்குப் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன நம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
ஜீரண_சக்தி
வெள்ளைப்படுதல்
ஆசனவாய்_பிரச்சினைகள்
காய்ச்சல்
உடல்_எடையைக்_குறைத்தல்
என பல வழிகளில் கருணைக்கிழங்கு நமக்குப் பயன்படுகிறது.
கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் #ஜீரண_மண்டலத்தின் இயக்கம் சீராகும். சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமடையும்.
அது மட்டுமல்லாது உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்து உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் அமையும்.
உடல்_சூட்டினால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கு கருணைக் கிழங்கு மிகவும் உதவி செய்கிறது. இது மூலத்தினால் உண்டாகும் சூடு, எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும் நாள்பட்ட காய்ச்சலைத் தீர்க்கும்..
பெண்களுக்கு இருப்பதிலேயே பெரிய பிரச்சினையென்றால் அது #மாதவிடாய் சம்பந்தப்பபட்ட பிரச்சினைகள் தான்.. ஏனெனில் அதை மையமாக வைத்துதான் மற்ற எல்லா பிரச்சினைகளும் அவர்களுக்கு உண்டாகின்றன.
அந்த பிரச்சினைகளை எல்லாம் கருணைக்கிழங்கு சரிசெய்யும் குறிப்பாக #வெள்ளைப்படுதலை தடுப்பதில் கருணைக்கிழங்கு மிகத் தீவிரம் காட்டுகிறது.
மூலநோய் உள்ளவர்கள் உட்காருவதற்கு பெரும் துன்பப்படுவார்கள் அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக இந்த பிரச்சினை உண்டாகிறது.
அப்படி #மூலநோய் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு தினமும் கருணைக்கிழங்கை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும் சாப்பிட்டவுடன் தாகம் அதிகம் எடுக்கும் அந்த சமயங்களில் மோரைக் குடித்து வந்தால் மூலநோய் விரைவில் தீரும் ஆசனவாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீரும்.
உடல்_பருமன் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு சிக்கலாக இருக்கிறது. இத்தகைய பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வுகளில் ஒன்றாக கருணைக் கிழங்கும் இருக்கிறது.
அடிக்கடி உணவில் கருணைக்கிழங்கை சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் #பருமனைக்_குறைக்கும்.
இந்த கருணைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சூரணத்தை தான் நாம் #வனசூரணாதி எனும் பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் உடல் எடையை குறைப்பதற்கு வாங்கி சாப்பிடுகிறோம்.













