டி20 தொடரில் நடராஜனுக்கு வாய்ப்பு - IPL குறைவான விலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டீவ்ஸ்மித்

SOCIAL SHARE
Pin It

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக், ரிஷப் பந்த், சஹல், அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், சைனி, தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மீத் குறைந்த விலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.  கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஸ்டீவ் ஸ்மித் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஏலத்தின்போது, ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வராத நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், கடந்த ஐபிஎல் ஏலத்தின்போது, ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த தொடரை விட தற்போது ஸ்மித் ரூ.10.3 கோடி குறைவாக எடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கூறுகையில், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் கடந்த ஐபிஎல் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு அவரை இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

ARUNACHALAM