பிரிட்டனில் குடியேற முயலும் ஹாங்காங்வாசிகள்...

SOCIAL SHARE
Pin It

1997-ஆம் ஆண்டுவரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் பின்னர் தனிநாடாக செயல்பட பிரிட்டிஷ் அரசு அனுமதியளித்தது. அன்றிலிருந்து சீனாவால் பகுதியாகக் கட்டுப்படுத்தப்படும் ஹாங்காகை தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருகிறது.

இதனையடுத்து பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு ஹாங்காங் மக்கள் எளிதில் பிரிட்டனுக்கு குடியேற விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இது சீனாவை கொதிப்படையச் செய்தது. பொது இடங்களில் ஒன்றுகூடி போராடிவரும் ஜனநாயக ஆதரவாளர்களை பயங்கரவாதி என்ற குற்றம் சாட்டி அவர்களை சீன போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.  கடந்த ஜூன் 2019-ஆம் ஆண்டு துவங்கி 2020-ஆம் ஆண்டுவரை 1,400 வன்முறை சம்பவங்கள் பொது இடங்களில் அரங்கேறியுள்ளன. போராட்ட காலங்களில் சிலர் அமைதி வழியிலும் வேறு சிலர் வன்முறையிலும் ஈடுபட்டு சீன கம்யூனிச அரசை ஹாங்காங்கிலிருந்து விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஹாங்காங்கின் எல்லையில் இருந்து சட்டவிரோதமாக பிரிட்டனில் குடியேற சில ஹாங்காங் குடிமக்கள் முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியது. சீனாவின் அராஜகப் பிடியில் வாழ்வதைக் காட்டிலும் பிரிட்டனில் குடியேறுவதை ஹாங்காங்வாசிகள் பலர் விரும்பியதால் தற்போது விசா விண்ணப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

 

ARUNACHALAM