உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் டுவிட்டர். பிரபலங்கள் முதல் ஒருநாட்டு குடிமக்கள் வரை அனைவரும் தங்களது சமூக கருத்துக்களை இதில் பதிவிடுவது வழக்கம். அவ்வப்போது டுவிட்டரில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதும் அவை உடனே டுவிட்டர் நிர்வாகத்தால் சரி செய்யப்படுவதும் வழக்கம். இதுபோல தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெம்பிஸ் என்ற வார்த்தையை தங்கள் டுவீட்டில் பயன்படுத்துவோர் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. இது எதனால் என்று பலர் விவாதிக்கத் துவங்கினார். சிறிய 'பக்' காரணமாக பல பயனாளர்களது கணக்கு தற்காலிக முடக்கத்துக்கு உள்ளானது. இது டுவிட்டர் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. பின்னர் உடனடியாக சரி செய்யப்பட்டது.
வட அமெரிக்காவின் நேஷனல் பஸ்கெட்பால் அசோஷியேஷன் ஒரு வீடியோவை பதிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். மேற்கொண்டு பிரச்னைகளைத் தவிர்க்க இந்த வீடியோவுக்குத் தொடர்புடைய மெம்பிஸ் டிபி என்கிற பாஸ்கெட்பால் வீரரது கணக்கு டுவிட்டர் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து மெம்பிஸ் என்று யார் பதிவிட்டாலும் அவரது கணக்கு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. டுவிட்டர் பயனாளர்கள் குழம்பினர். உடனடியாக கணினி கோடிங்கை டுவிட்டர் நிறுவனம் மாற்றி அமைத்து இதனை சரி செய்தது.













