சமூக வலைதள கருத்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை... மத்திய அரசு

SOCIAL SHARE
Pin It

''சமூக வலைதளங்களில் என்ன கருத்துக்களை வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கவில்லை. அதே நேரத்தில், அவதுாறு பரப்பும் கருத்துக்களை நீக்கவே உத்தரவிடப்படுகிறது,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

நாட்டில், பல்வேறு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 140 கோடியாக உள்ளது. 'பேஸ்புக், வாட்ஸ ஆப், டுவிட்டர்' உள்ளிட்ட நிறுவனங்கள், இங்கு தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இணையம் என்பது மனித குலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு. அதே நேரத்தில் இதைப் பயன்படுத்தி, ஒரு சில நிறுவனங்கள் ஏகாதிபத்யம் செய்வதை ஏற்க முடியாது.சமூக வலைதளங்களில் எதிர்ப்பு மற்றும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பதை அரசு எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், அது அவதுாறு ஏற்படுத்தும் வகையிலும், நம் நாட்டை இழிவுபடுத்தும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதே அரசின் வாதம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில், ஆபாச படங்களை வெளியிட்டால், ஏற்க முடியுமா.

அதுபோல தான், சர்வதேச அரங்கில், இந்தியாவை இழிவுபடுத்துவதையும் ஏற்க முடியாது. இதுபோன்று, பெண்களை இழிவுபடுத்தும், நாட்டை இழிவுபடுத்தும் கருத்துக்களை, 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என, சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளோம். சமூக வலைதளங்களில் என்னென்ன கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாட்டையும் அரசு விதிக்கவில்லை.

அதே நேரத்தில் அவதுாறு கருத்துக்களை நீக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், சமூக வலைதளங்களில் பொய் தகவலை பரப்புவதை தடுக்க, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறோம் என அவர் கூறினார்.

 

ARUNACHALAM