2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 13 மாநிலங்களில் இருந்து 460 படங்கள் தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த தமிழ் படமாக அசுரன் தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக தனுஷ், துணை நடிகராக விஜய் சேதுபதி, இசையமைப்பாளராக டி.இமான் தேர்வாகி உள்ளனர். ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது தமிழில் கே.டி. எனும் கருப்புதுரை படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, ஹிந்தி)
சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)
சிறந்த இயக்குனர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - ஹிந்தி)
சிறந்த படம் - மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர்(கன்னடம்)
சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி - படம் : தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (படம் : விஸ்வாசம்)
சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)
சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், ஹிந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (படம் : கே.டி. எனும் கருப்புதுரை)













