முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு உதவும் சாப்ட்வேர்

SOCIAL SHARE
Pin It

உயர்கல்விக்கு பிறகு Phd ,Mphil ஆகியமுனைவர் பட்ட ஆய்வுக்கல்வியே மிகஉயர்ந்த படிநிலையாகும் இந்த முனைவர் பட்ட ஆய்வுகள் ஆனது மிக சிக்கலானதும் காலவிரையும் ஆனதுமாக உள்ளன அவ்வாறான சிக்கலான முனைவர் பட்ட ஆய்வுகளை எளிமை படுத்திட பல்வேறு கட்டணத்துடனான கருவிகள் உள்ளன Phd அல்லது Mphil முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இந்த கருவிகளை பயன்படுத்தி கொள்வதற்காக மேலும் செலவிடுவது என்பது அவர்களுக்கு மேலும் கூடுதலான நிதிச்சுமையை ஏற்படுத்துகின்றன.

அதனால் இதனை பயன்படுத்துவதற்கு தயங்கியும் மயங்கியும் தம்முடைய Phdஅல்லது Mphil முனைவர் பட்ட ஆய்வையே விட்டுவிடும் நிலையும்.

ஏற்படுகின்றது இதனை தவிர்த்து தம்முடைய Phd அல்லது Mphilமுனைவர் பட்ட ஆய்வினை தொடர்ந்து தடைபெறாமல் இருப்பதற்காக உதவவருவதுதான் கட்டற்ற கட்டணமற்ற இந்த கருவிகளாகும்.

இவ்வாறான முனைவர் பட்ட ஆய்வாளர்கள் முதல் தேவையே தாம் ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் துறையில் யார்யார் ஆய்வுசெய்து என்னென்ன முடிவிற்கு வந்துள்ளார்கள் என்ற செய்தியை தேடிபிடித்து மேற்கோள் காட்டசெய்வதுதான் அவ்வாறான செயலை எளிமைபடுத்திட கைகொடுப்பதுதான் Zotero எனும் கட்டற்ற கட்டணமற்ற கருவியாகும்.

இது தனியாகவும் அல்லது ஃபயர்ஃபாக்ஸின் நீட்சியாகவும் கிடைக்கின்றது இது ஆய்வாளர்களுக்கு தேவையான தகவல்களை சேகரிக்கவும், ஒழுங்கமைக்கவும், மேற்கோள், ஒருங்கிணைக்கவும், ஒத்துழைக்கவும் ஆன வசதிகளோடு IEEEcitation எனும் பாவணையிலிருந்து Springler என்றவாறு வேறொரு பாவணைக்கு ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக மாற்றமுடியும்.

இதில் 81000 பாவணைகள் உள்ளன நம்முடைய சொந்த பாவணைகளைகூட உருவாக்கி இந்த பட்டியலில் சேர்தது கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் <<http://www.zetro.org/>>எனும் இணையபக்கத்திலிருந்து.

நாம் கண்ணால்என்ன காண்கின்றோமோ அதனை நாம் பெறமுடியும் (WYSIWYG) எனும் அடிப்படையில் மிக எளிதாக தம்முடைய ஆய்வுக்கட்டுரையில் கொண்டுவருவதற்கு <<http://www.latex-project.org/>> எனும் கருவி பயனுள்ளதாக அமைகின்றது.

அறிக்கைகள் ஆய்வுக்கட்டுகல் புத்தகங்கள் போன்றவைகளை 300 மேற்பட்ட பக்கங்களை எளிதாக கையாளவும் இணைப்புகளை எளிதாக உருவாக்கிடவும் கணக்கிற்கான வாய்ப்பாடுகளை அதன் அமைவிலேயே கட்டுரையின் இடையே கொண்டுவரவும் பல்வேறு மொழிகளை ஆதரித்திடும் வசதியும் மிக்கது அனைத்து இயக்க முறைமைகளையும் செயல்படும் திறன் கொண்டது இதனை நிறுவுகை செய்திடாமல் இதனுடைய கருவிகளை கொண்டு நம்முடைய ஆய்வு பணியை முடித்திடமுடியும்.

ஆய்வு கட்டுரையில் இடையிடையே வரைகலை எடுத்து காட்டினை கொண்டுவருவதற்காக <<http://www.ywork‡.com/yed/>> எனும் கட்டற்ற கட்டணமற்ற கருவிஉதவிடுகின்றது.

அவ்வாறே புள்ளியில் ஆய்வு கணக்கீடுகளை கொண்டுவந்து சேர்ப்பதற்கு <<http://www.gnu.org/softare/pspp/>> எனும் கருவி பேருதவியாய் இருக்கின்றது.

அறிவியல் பூர்வ கணக்கீடுகளுக்கு <<http://scilab.io/>> எனும் கருவி பேருதவியாய் இருக்கின்றது

Karisalmedia Admin