கடந்த ஜூன் மாத இறுதியில் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான மார்க் சக்கர்பெர்க் தனது சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 7.2 பில்லியன் டாலரை இழந்தார். அதற்குக் காரணம் பேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரம் அளித்துவந்த பல மிக பெரிய நிறுவனங்கள் பேஸ்புக்கிற்கு விளம்பரம் தருவதை நிறுத்துவதாக அறிவித்தது தான்.
இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பில் கிட்டதட்ட 56 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இழந்தது.
இதனால்தான் அந்த நிறுவனத்தில் பெரும் பங்குதாரரான சுகர்பர்கின் சொத்து மதிப்பு 8.3 சதவீதம் அதாவது 7.2 பில்லியன் டாலர்கள் சரிந்தது.
நாம் ஏற்கனவே கூறியது போல் இந்த வீழ்ச்சிக்கு காரணம் பல முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக்கிற்கு விளம்பரங்கள் தருவதை நிறுத்தியது தான். ஆனால் அதற்குக் காரணம் தற்பொழுது உள்ள கொரோனாவோ அல்லது பொருளாதார மந்த நிலையோ அல்ல, அதற்கு காரணம் ஃபேஸ்புக் தனது வலைத்தளத்திலும், ஆப்பிளும் HATE SPEECHES என்று சொல்லப்படும் வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் மற்றும் DIS INFORMATION மற்றும் பால்ஸ் நியூஸ் (FALSE NEWS) என்று சொல்லப்படும் போலி, செய்திகள் மற்றும் சில வலதுசாரிக் கட்சியை சேர்ந்தவர்கள் கொடுக்கும் விளம்பரங்களை தணிக்கை செய்யாமலும், அதனுடைய உண்மைத்தன்மையை சரி பார்க்காமலும், தனது வலைதளத்தில் காட்டி வந்தது பலரின் கண்டனத்துக்கு உள்ளானது. ஃபேஸ்புக்கானது பகிரப்படும் செய்திகள் மற்றும் அரசியல் பேச்சுகளை சரி செய்து பார்த்து வெளியிட்டிருக்கவேண்டும்.
இதன் விளைவாகவே தற்பொழுது உலகின் பெரும் முன்னணி நிறுவனங்களான யூனிலீவர் (UNILEVER), கொக்கோகோலா(COCO COLA), வெரிசான்(VERIZON) போன்ற நிறுவனங்கள், இதே போல் உள்ள மற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்துகொண்டு, பேஸ்புக்கிற்கு விளம்பரங்கள் கொடுக்காமல் புறக்கணிக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
சரி இவர்கள் ஏன் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல் பேச்சுகளை சரி செய்து பார்த்து வெளியிடவேண்டும் என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால், அதற்கு பல காரணங்கள் உள்ளது. பேஸ்புக்கின் அல்காரிதம்(ALGORITHM) எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒரு நபருக்கு தனது நியூஸ் ஃபீட் இல் அவர் லைக் செய்து வைத்திருக்கும் அனைத்து ப்ரொபைல் மற்றும் பேச்சுகளின் (PAGEGALIN) போஸ்ட்களை காட்டுவதில்லை. மாறாக அந்த நபர் எந்தக் குறிப்பிட்ட விதமான போஸ்ட்களை கிளிக் செய்து பார்க்கிறாரோ அதைப்போலவே உள்ள அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட போஸ்ட் களையே காட்டும். இதைப்போன்ற அல்காரிதம் யூடியூப் போன்ற வலைதளங்களிலும் இருக்கின்றன. ஆனால் அந்த வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு புகார் வந்தாலோ அல்லது அது பொய் செய்தி என்று அவர்களுக்கு தெரிய வந்தாலும் அத்தகைய பதிவை நீக்கி விடுகின்றன. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனமோ தெரிந்தே
இத்தகைய பதிவுகளை அனுமதிக்கின்றன, இதற்கு அந்நிறுவனத்தின் தலைவர் சுகர்பக் கூறும் காரணம் என்னவென்றால், கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது என்றும், அதை போலவே எந்த ஒரு நபரும் எல்லாவிதமான பதிவுகளையும் பார்க்க உரிமை உள்ளது என்றும், அனைவரது கருத்துக்களையும் கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது, எனவும் அவை அனைத்தையும் பார்த்து அவரவர் தங்களின் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தனியார் நிறுவனமான பேஸ்புக்கிற்கு அதை தணிக்கை செய்ய அனுமதி இல்லை என்றும் கூறி, இதுதான் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு என்று கூறினார். பேஸ்புக்கின் இந்த நிலைபாடல் உலகநாடுகள் பலவற்றில் 2011 தொடங்கி குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நடந்தது போன்று புரட்சிகளும் போராட்டங்களும் நடந்து, அதனால் பல நல்ல மாற்றங்கள் நடந்தாலும், வேறு சில நாடுகளில் வலதுசாரி சித்தாந்தமும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. குறிப்பாக பல நாடுகளில் தேர்தல் சமயத்தில் இது பெரும் தாக்கத்தை உண்டாக்கி பல சமயங்களில் முடிவுகளையே மாற்றும் அளவிற்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது, ஏன் அமெரிக்காவிலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் நிறவெறியை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் மற்றும் அவர் கூறும் போலி செய்திகள் அனைத்தும் அவரை பின்பற்றிய சில படிப்பறிவு இல்லாத இனவெறி கொண்ட ஏழ்மை நிலையில் இருந்த வலதுசாரி ஆதரவாளர்களுக்கு கொண்டு சேர்த்ததில் இது பெரும் பங்காற்றியது. இத்தகைய வாக்குகள் தான் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலரியை விட சிறிய அளவிலான முன்னிலை பெற்று வெற்றி அடைய செய்ததாக அந்நாட்டு ஊடகங்களால் குற்றம்சாட்டப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் தனது பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக குற்றம்சாட்டப்பட்டது, இதைத்தொடர்ந்து ஃபேஸ்புக் சில சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக கூறியது. ஆனால் அது பெயரளவிலேயே இருந்தது. பேஸ்புக் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதனாலேயே இந்தப் புறக்கணிப்பு நடந்தது.
ஆனால் மற்றும் ஒரு பெரிய சமூக வலைத்தளமான ட்விட்டர் இத்தகைய வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் மற்றும் போலி செய்திகள் உடைய பதிவுகளுக்கு எதிராக முற்றிலும் மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதைப்போன்ற பதிவுகளுக்கு ட்விட்டர் இரண்டு வழிமுறைகளை பயன்படுத்துகிறது. ஒன்று அத்தகைய பதிவை நீக்கி விடுகிறது அல்லது அதகைய பதிவில் வெறுப்பு பேச்சு என்று ஒரு மார்க் செய்து விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. அப்பொழுது டிரம்ப் WHEN THE LOOTING STARTS SHOOTING STARTS (வெந்த லூட்டிங் ஸ்டார்ட்ஸ் சூட்டிங் ஸ்டார்ட்ஸ்) என்று ஒரு ட்வீட் செய்தார். அதாவது துப்பாக்கி சூடு மூலம் இத்தகைய செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற பொருள்பட அது இருந்தது. உடனே ட்விட்டர் நிறுவனம் அந்தப் பதிவிற்கு மேல் வயலெண்ட் ரிடாரிக் (VIOLENT RHETORIC) அதாவது வன்முறை தூண்ட கூடிய செயல் என்று மார்க் செய்து வைத்தது.
டுவிட்டர் நிறுவனத்தின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் இதே பதிவு ஃபேஸ்புக்கில் அப்படியே காட்டப்பட்டது. இதற்கு சுக்கர்பர்க் கூறிய காரணம், இது ஃபேஸ்புக்கின் விதிமுறைகளை மீறவில்லை. எனவே இந்த பதிவு நீடிக்கலாம் என்று கூறினார்.
ஃபேஸ்புக்கின் இதுபோன்ற நடவடிக்கைகள் தான் இந்த நிறுவனங்கள் விளம்பரங்கள் கொடுக்காமல் பேஸ்புக்கை புறக்கணிக்கும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது.
அதிலும் சில நிறுவனங்கள் ஃபேஸ்புக் தனது தணிக்கை நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டு வரும் வரை இந்தப் புறக்கணிப்பு தொடரும் என்று கூறியுள்ளது.













