வெளிநாட்டில் வேலை கேள்வி குறியாகியுள்ளது

SOCIAL SHARE
Pin It

கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி, படித்து முடித்ததும் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வது அதிகரித்து உள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தனர்.கடந்த ஆண்டு உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலால், வெளிநாடுகளில் பணிபுரிந்த இளைஞர்கள், அங்கு கடந்த பல மாதங்களாக வேலையின்றி, வீடு, அறைகளில் முடங்கி கிடக்கின்றனர். பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். தற்போது, மீண்டும் கொரோனா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உருமாறி பரவி வருவதால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அதே பணிக்கு தற்போது திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும், புதியதாக, பல்வேறு கனவுகளுடன் வெளிநாட்டில் வேலைக்கு போக காத்திருந்த இளைஞர்களின் கனவும் கேள்வி குறியாகியுள்ளது.

உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன.எனவே, ஒவ்வொரு நாடும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க, அதிக ஆர்வம் காட்டுகின்றன.வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றன.மேலும், கொரோனாஅச்சத்தால், சொந்த ஊர் திரும்பிய பலர், மீண்டும் அதே நாட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

ARUNACHALAM