தொழில்நுட்ப நிறுவனத்திற்கான ஒரு அரிய நடவடிக்கையாக, கூகிளில் 400 பொறியாளர்கள் குழு ஒன்று சேர்ந்து ஒரு ஊழியர் சங்கத்தை உருவாக்கியுள்ளது. கலிஃபோர்னியாவில் தடையற்ற சந்தை மற்றும் தொழிற்சங்க எதிர்ப்பு முகாம் இப்போது கூகிளில் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாட்டின் துவக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்த இயக்கம் 2020 முழுவதிலும் பலத்த ஆதரவைப் பெற்று வந்தது. இப்போது தனது தலைமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த புதிய தொழிற்சங்கத்திற்கு ‘ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கூகிளில் இந்த செயல்பாட்டிற்கு 'கட்டமைப்பு மற்றும் நீட்டித்த நிலைப்பாட்டை’ அளிப்பதே இந்த தொழிற்சங்கத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் செவி ஷா, ‘மக்கள் போதுமான ஊதியம் பெறுகிறார்களா?’ என்பதைப் போன்ற பணியிட கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், குறிக்கோள் மிகவும் பரந்த அளவில் உள்ளதாக” குறிப்பிட்டார். ஆல்பாபெட்டை பணியாளர் என்ற சக்தி தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையிலிருந்து பிறக்கிறது என்று யூனியன் அறிவிக்கிறது.இதன் திட்டங்கள்...
- பணி நிலைமைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் நியாயமானவையாகவும் இருக்க வேண்டும்.
- துன்புறுத்தல், துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் குற்றவாளிகள் அந்த குற்றங்களுக்கு பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.
- நன்மதிப்புகளுடன் ஒத்துப்போகாத பிராஜெக்டுகளில் பணிபுரிய மறுக்கும் சுதந்திரம் வேண்டும்.
- அனைத்து நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரே விதமான வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட தொழிற்சங்க உருவாக்கத்தால் தலைமையுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். கூகிள் நிறுவனத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் பிரச்சனைகளைப் பற்றி இந்த தொழிற்சங்கம் முன்னிலைப்படுத்தக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













