கைபடாமல் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க முடியுமா?

SOCIAL SHARE
Pin It

ஏடிஎம் மட்டுமல்ல, எந்த ஸ்மார்ட் சாதனத்தையும் திறக்க கையைப் பயன்படுத்தத் தேவையில்லை. அப்படியொரு தொழில்நுட்பத்தை இன்டெல் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. இதற்கு ரியல்சென்ஸ் ஐடி (RealSense ID) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை உருவாக்க மிக நுட்பமான சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இன்டெல்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பை மிகவும் வலிமையாக்குகிறது. எனவே ஏடிஎம்கள், கியோஸ்க் (Kiosk) மற்றும் ஸ்மார்ட் லாக்கர்களில் (Smart Lockers) பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சாதனம் பயன்படுத்தப்படலாம். இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இன்டெல் இந்த சாதனத்தை சந்தையில் விற்பனைக்காக களம் இறக்கும் என்று தெரிகிறது.  

இது ஐடி திருட்டைத் தடுக்கிறது. பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருட்டுப் போகும் அபாயத்தையும் குறைக்கிறது. இந்த சாதனம் அவ்வப்போது பயனரின் முகத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்டுபிடிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

அதாவது, ஒரு நபரின் முகத்தில் தாடி அல்லது மீசை இருந்தாலும், இந்த நுட்பம் அந்த நபரின் முகத்தை அடையாளம் காணும். இந்த தொழில்நுட்பத்திற்கு வேறு எந்த நெட்வொர்க்கும் தேவையில்லை என்பது முக்கியமான செய்தி. பயனர்களின் முகம் முழுமையாக குறியாக்கம் செய்யப்படும். இன்டெல் அறிமுகப்படுத்தும் இந்த சாதனத்தின் விலை ரூ.7,300 மட்டுமே.

ARUNACHALAM