மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலனுக்காக 1999ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் இயற்றப்பட்டது இச்சட்டம்
மனவளர்ச்சி மற்றும் அவர்கள் தொடர்புடைய ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனமுற்றோர் ஆகிய 4 பிரிவினரின் நலன்களுக்காக தேசிய அறக்கட்டளை 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 18 வயதுக்கும் மேலுள்ள இத்தகைய குழந்தைகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர்களை நியமிப்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 100 கோடி கார்ப்பஸ் நிதியில் (ஒரு முறை டெப்பாசிட் நிதி) தேசிய அறக்கட்டளை உருவாக்கி கடந்த இறுபது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தை செயல்படுவதில் பல்வேறு போதாமைகள் உள்ளபோதிலும், நிரமயா என்ற பெயரில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு சுகாதார காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்களையும் இந்த அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய அரசும் கையெழுத்திட்டு ஏற்றுள்ள 2007ஆம் ஆண்டு ஐ.நா. ஊனமுற்றோர் கன்வென்ஷன் விதிகளுடன் தேசிய அறக்கட்டளை சட்ட விதிகளும் உடன்பாடுள்ளவைகளாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2016ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுவிட்டபோதிலும், தேசிய அறக்கட்டளை சட்டத்தை திருத்த மத்திய அரசு தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து தர முன்வர வேண்டும்.













