- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 165
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றார்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை கொலை செய்வதாக மிரட்டியதாக அமெரிக்க மாகாணமான புளோரிடாவில், 39 வயது செவிலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது
பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 18 வரை அமெரிக்காவின் துணை அதிபரை கொலைசெய்வதாக பெல்ப்ஸ் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார் என்று புளோரிடாவின் அமெரிக்க தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள தனது கணவருக்கு பெல்ப்ஸ் வீடியோக்களை அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மீது வெறுப்பை உமிழும் வகையில் அவர் பேசுவதைக் காணலாம்.
ஆனால், கைது செய்யப்பட்ட பெல்ப்ஸ் இது பற்றி கூறுகையில், அவர் துணை அதிபராக பதிவியேற்றுக் கொண்ட போது தான் அவர் மீது கோபம் கொண்டதாகவும், இப்போது அவர் மீது கோபம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.
சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டுப் பாலும், நம் நாட்டுப் பசும்பாலும் பார்க்க ஒன்று போலவே இருந்தாலும், இரண்டிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protien) நாட்டுப் பசுவில் A2 Beta – Casein ஆகவும், சீமை மாடுகளில் A1 Beta – Casein ஆகவும் மாறுபடுகிறது.
இதில் A1 Beta – Casein புரதம் மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்பொழுது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். BCM7 என்னும் புரோட்டீன் மூலக்கூறு சீமை மாட்டுப் பாலில் பல வியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. மார்பின், ஓபியம் போதைப்பொருளோடு ஒப்பு நோக்கக்கூடிய ரசாயண மூலக்கூறுகளாகும்.
இதற்கு சரியான உதாரணம், நாட்டுப் பசுவின் கன்றுகள் பால் குடித்தவுடன் உற்சாகமாக துள்ளி விளையாடும். ஆனால் சீமை மாட்டுக் கன்றுகள் சோர்ந்து தூங்கும்.
இந்த சீமை மாட்டின் பாலை மனிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க கொடுக்க குழந்தையின் மூளை வளர்ச்சி மந்தத்தன்மையுடன் வளரும், மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்காது. குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றம் உண்டாகுகின்றது, மனித உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் சம நிலையை தடுமாற செய்கின்றது.
இதன் தாக்கம் பிட்டியூட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை என அனைத்தும் தடுமாறச் செய்கின்றது. இதன் மூலம் புதுப்புது வியாதிகள் பெருகிக்கொண்டே போகின்றது.
சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது.
இன்னும் ஒரு மோசமான, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்டிராத நோய் ஆட்டிசம் ( சதை பிறழ்வு நோய்) இந்த சீமை மாட்டுப் பாலை குழந்தைகளுக்கு தொடர்ந்து தருவதால் அவர்களது உடலையும், மூளையையும் ஒரு சேர தாக்குகின்ற கொடிய நோய் ஆகும்.
சீமை மாட்டுகளின் உடலில் ஆண், பெண் செக்ஸ் ஹார்மோன்கள் சம நிலையில் இல்லை. பெரும்பாலும் பெண் (கிடாரிகள்) மாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக ஊசிகள் மூலமே நடைபெறுவதினாலும், அவைகளில் ஆண் (காளை) மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மந்தமானதாகவும், பசு மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மிகுதியாகவும் உடையதாகவும் உள்ளது.
இது போன்ற குறைபாடுள்ள சிமை மாட்டுப் பாலை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய், கர்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.
சீமை மாட்டுப் பால் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் போல. அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டிற்கு வந்த புதிதில் சரிவிகிதமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டுப் பசுக்களின் தாக்கம் சரி விகிதமாக இருந்தது. அதனால் அன்றைய கால கட்டங்களில் தெரியவில்லை. தற்பொழுது நம் நாட்டு மாடுகள் பெரும்பாலும் ஒழிந்து, சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோய்களின் பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.
எனவே முடிந்தால் நாட்டுப் பசுவின் பாலை அருந்துங்கள், அல்லது தற்பொழுது கிடைத்து வரும் சீமை மாட்டுப் பால், பால் பொருட்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.
உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. எனவே பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தநிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கடந்த வாரம் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் ஷாங்காய் நகரில் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஷி ஜென்ஹூவாவை நேரில் சந்தித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதி பூண்டன.
அமெரிக்கா மற்றும் சீனா காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளன. இந்த பருவநிலை பிரச்சினை தீவிரத்தன்மை மற்றும் அவசரத்துடன் கவனிக்கப்பட வேண்டும். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அத்துடன் குறைந்த கார்பன் ஆற்றலுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்கு நிதியளிக்க இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல தரப்பு செயல்முறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் சீனா உறுதிபூண்டுள்ளன.
அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டை இரு நாடுகளும் எதிர்நோக்குகின்றன.
இதனிடையே வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா உச்சி மாநாட்டை நடத்துகிறது என்பதும், இதில் கலந்து கொள்ளும்படி சீன அதிபர் ஜின்பிங் உள்பட உலக தலைவர்கள் 40 பேருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அமெரிக்காவும், பிற நாடுகளும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் தேசிய இலக்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் நிக் ஜேம்ஸ் என்ற நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த சில ஆப்பிள்களுக்கு பதிலாக ஒரு புதிய ஆப்பிள் ஐபோனை இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுகாடிப்போனார்.
” நாங்கள் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தோம், ஆனால், ஒரு ஆப்பிள் ஐபோன் கிடைத்தது! என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது! ” என்று ஜேம்ஸ் கூறினார்.
டெஸ்கோ மொபைல் என்ற நிறுவனம் விளம்பர உத்தியாக “super substitute” என்ற விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு ‘click and collect’ என்ற பரிசு திட்டத்தின் கீழ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களது ஆர்டர்களுக்கு பதிலாக, வேறு விலை உயர்ந்த பொருளை பரிசாக அனுப்பி வைத்தது.
"டெஸ்கோ மொபைல் ஏப்ரல் 18 வரை மொத்தம் 80 பொருட்களை ஒரு சில கடைகளில் கொடுத்துள்ளது. வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள், மேலும் ஒரு “super substitute”, அதற்கு பதிலாக வேறொரு விலை உயர்ந்த பொருளை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற நீங்கள் சில பொருட்களை வாங்க வேண்டும்,” என்று இந்த பரிசு திட்டம் குறித்து அந்த நிறூவனம் விளக்கியுள்ளது.
’சூப்பர்மார்க்கெட் மற்றும் மொபைல் உலகங்கள் ஒன்றிணைந்தால் எவ்வளவு ஆச்சரியமான விஷயங்கள் நிகழக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்காக இந்த பரிசு திட்டம் ஏற்படுத்தப்பட்டது” என்று டெஸ்கோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களில் சிலருக்கு ஏர்பாட்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி சாதனங்கள் ஆகியவற்றை பரிசாக பெற்றனர்.
பக்கம் 41 / 90



