Editor's Choice

வெறும் நீரை அருந்துவதை விட, வெதுவெதுப்பான அல்லது உங்களால் பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவில் சுடுநீரை அருந்துவது மிக நல்லது. வெந்நீரின் ஆரோக்கிய நன்மைகளை இங்கே காணலாம். 

1. எடை இழப்பு

இன்றைய உலகில் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஃபிட்டாகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்கு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அதிகாலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை  அருந்தினால், அது நம் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கும். இதன் விளைவாக நமது உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும். நீரில் சுவையை சேர்க்க விடும்பினால், அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்க்கலாம். எலுமிச்சை சாறு, உடலில் தேங்கியுள்ள அமிலத்தன்மை மற்றும் நச்சுகளுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் உடலில் எடை குறையும். 

2. சிறந்த இரத்த ஓட்டம்

நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவால், ​​நம் உடலில் கொழுப்பு மற்றும் நச்சுப் படிவுகள் உண்டாகின்றன. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் சிறுநீரக நச்சுகள் மற்றும் குடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் சிறுநீர் பகுதி வழியாக அகற்றப்படுகின்றன. இது நமது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

3. நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமானம் பலம் பெறும்

அதிகப்படியான உணவு காரணமாக பலர் செரிமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உணவுக்கு முன்னும் பின்னும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உணவு சிறு துண்டுகளாக உடைக்கப்படுகின்றது. இது உங்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. சூடான நீரில் எந்த கலோரியும் இல்லை. சாப்பிட்ட உடனேயே வெதுவெதுப்பான நீரை குடிப்பதும் தவறு. சிறிது இடைவெளி விட்டு நீரை அருந்த வேண்டும். உடனே அருந்தினால், செரிமான சக்தி குறைந்து எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

4. மூக்கடைப்பு மற்றும் தொண்டை பிரச்சனைகள் தீரும் 

அதிகப்படியான மாசு காரணமாக பலருக்கு இந்த பிரச்சனைகள் வருகின்றன. இரவில் தேனுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், அரிப்பு மற்றும் தொண்டை புண் வராமல் தடுக்கலாம். இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைப் போட்டு கொப்பளிக்கலாம், தொண்டையில் வைத்து கார்குல் செய்யலாம். இது நமது சுவாச அமைப்பிலிருந்து கபத்தை அழிக்கிறது. எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் மூக்கடைப்பில் இருந்து விடுபடுவீர்கள். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் இது வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. 

5. கூந்தல் பிரச்சனைக்குத் தீர்வு 

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் முடி வேர்களின் நரம்புகள் துடிதுடிப்புடன் இயங்கும். இதனால், இரத்த ஓட்டம் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறும். இது நம் முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. சூடான நீர் நீரிழப்பு, பொடுகு ஆகியவற்றை தடுப்பதோடு உச்சந்தலை வறண்டு போகாமல் தடுக்கிறது.

6. இளவயது முதுமையை தடுக்கிறது

பல தோல் பிரச்சினைகள் செரிமானத்தால் ஏற்படுகின்றன. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நமது செரிமானம் இயல்பாகி, சரும செல்களை சரிசெய்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இது முகப்பரு, தோல் சுருக்கம் மற்றும் இது தொடர்பான பிற பிரச்சனைகளையும் தடுக்கிறது. வெளியே மேக் அப் செய்து வயதை குறைப்பதை விட, உள்ளிருந்து ஆரோக்கியமாக இருப்பதுதான் நல்லது.

7. மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு நிவாரணம்

பலர் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இது பரம்பரை அல்லது உணவுப் பழக்கம் காரணமாகவும் ஏற்படலாம். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பதால்தான் பெரும்பாலான வயிற்றின் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வெறும் வயிற்றில் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் குடலின் இயக்கம் அதிகரிக்கும். இதனால் உணவு எந்த வித தடையும் இல்லாமல் குடல் வழியாக எளிதில் செல்லும். 

நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 2.5 முதல் 3.0 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அவற்றில், பாதி சிறுநீரகத்தாலும் மீதி தோல், நுரையீரல் மற்றும் குடலாலும் உறிஞ்சப்படுகின்றன.

Editor's Choice

கொரோனா தடுப்பூசி  பற்றாக்குறை இருப்பதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில் 'சிங்கிள் ஷாட் தடுப்பூசி' பயன்பாடு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின்  கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி எதிர்காலத்தில் ஒற்றை ஷாட் தடுப்பூசியாக தயாரிக்கப்படலாம்.

தற்போது, ​​கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin)ஆகிய இரு தடுப்பூசிகளும் இரண்டு டோஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றை டோஸ் தவிர 'Mixing Dose' குறித்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson), ஸ்பூட்னிக் லைட் (Sputnik Light) மற்றும் கோவிஷீல்ட் (Covishield)  ஆகியவற்றின் தயாரிப்பில், ஒரே விதமான செயல்முறை மற்றும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஸ்பூட்னிக் லைட் ஆகியவை ஒற்றை டோஸ் தடுப்பூசிகள். அத்தகைய சூழ்நிலையில், அதே செயல்முறையிலிருந்து தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானதாக இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வின் முடிவுகள், ஒரு டோஸ் மட்டுமே போதும் என்பதற்கு சாதகமானதாக இருந்தால், தடுப்பூசிகளின் பற்றாக்குறை பெருமளவில் தீர்ந்து, நாட்டில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடப்பட்டு விடும்.

இது தவிர, தடுப்பூசியின் 'மிக்சிங் டோஸ்' குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் பயன்படுத்துவதன் மூலம் 'கலவை டோஸ்' குறித்த ஆய்வு ஒரு மாதத்தில் தொடங்கி இரண்டரை மாதங்களில் நிறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆய்வு தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டறிவதை எளிதாக்கும். அண்மையில், 20 பேருக்கு தற்செயலாக இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத நிலையில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

Editor's Choice

உணவு உட்கொண்ட பிறகு சற்று களைப்பார படுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இந்த ஒரு பழக்கம் உடலில் பல நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது. 

உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, உடல் முழுவதும் அந்த உணவு சென்று சேர்வதும் முக்கியமாகும். நாம் உண்ணும் உணவின் செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது.

உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பதால் (Walking), உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு உங்களால் 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும். தற்போது கொரோனா தொற்று உள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்வது பாதுகாப்பானது இல்லை என்பதால், உணவு உட்கொண்ட பிறகு, மொட்டை மாடியில் அல்லது பால்கனியில் நடக்கலாம். 

எப்பொழுதும் சாப்பிட்டவுடன் உடலுக்கு இயக்கத்தை கொடுக்க வெண்டும் என்பதை மறக்கக்கூடாது. இந்த ஒரு ஆரோக்கியமான பழக்கத்தால், உங்கள் எடை மற்றும் சர்க்கரை இரண்டும் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒருவர் சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது, உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது. 

உணவுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் உடல் எடை குறைகிறது. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இதை விட ஒரு எளிதான வழி கிடைக்காது. 

உணவு சாப்பிட்ட பிறகு நடப்பதால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. மேலும் வளர்சிதை மாற்றமும் பலப்படுத்தப்படுகிறது.

உணவைச் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நல்ல இரவு உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.

உணவு உட்கொண்ட பிறகு தினமும் நடப்பதால், தசைகள் சரியாக வேலை செய்யும். இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் கண்டிப்பாக நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் உணவை உட்கொண்ட பிறகு குறைந்தது 15-20 நிமிடங்களாவது நடக்க வேண்டும். உங்களுக்கு அதிக நேரம் இருந்தால், இந்த நேரத்தை அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நடந்தால்தான் பயன் இருக்கும். 

உணவு உட்கொண்ட பிறகு நீங்கள் நடக்க வேண்டும், ஆனால் மெதுவாக நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் பலன் இருக்காது. 
சாப்பிட்ட பிறகு விறுவிறுப்பாக, வேகமாக நடப்பது செரிமான அமைப்பைக் கெடுக்கும்.
சாப்பிட்ட பிறகு எந்தவிதமான கடின உடற்பயிற்சியையும் செய்ய வேண்டாம்.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், நடை பயிற்சியுடன் உங்கள் உணவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு குறைந்தது ஐந்து முறையாவது 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இப்படி செய்தாலே போதும், நீங்கள் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க முடியும். 

Editor's Choice

தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அதே சமயத்தில் சில நேரங்களில் தண்ணீர் குடித்தால் அது நம் உடல் நிலையில் பிரச்சினையை ஏற்படுத்தும்

  1. குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் அவ்வளவு தான். கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள்.
  2. இந்த நிலையில் நாம் நீர் அருந்த கூடாது.
  3. ஏனென்றால், இவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்துமாம்.
  4. பலருக்கு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும்.
  5. ஆனால், பொதுவாகவே இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இது போன்ற நிலையில், உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும்.
  6. அத்துடன் இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் தடைபட கூடும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது.
  7. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.
  8. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள்.
  9. இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.
Editor's Choice

மியூகோமிகோசிஸ் (Mucormycosis) என்ற பூஞ்சை தொற்றுநோய் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு, சிலர் கருப்பு பூஞ்சை நோய்க்கு இரையாகிறார்கள்.

இந்த பூஞ்சை உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. நுரையீரலை இதயம் மற்றும் மூளைக்கு இலக்காகக் கொண்ட கருப்பு பூஞ்சை (Black Fungus) மக்களுக்கு ஆபத்தானது என்பதை காட்டுகிறது. இருப்பினும், சுகாதார வல்லுநர்கள் கருப்பு பூஞ்சை பற்றி கூறுகையில், இந்த பூஞ்சை தொற்று தோலில் உள்ள காயங்கள் மூலம் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். இதனுடன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் கருப்பு பூஞ்சை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் சிக்கன் சாப்பிடுவதன் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிக்கன் சாப்பிடுவதன் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்பது ஒரு வதந்தி என்றும், சிக்கனுக்கும் கருப்பு பூஞ்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக, கருப்பு பூஞ்சை கொரோனா வைரஸ் போல வாய் மற்றும் மூக்கு வழியாகவும் பரவுகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வாய் மற்றும் மூக்கு வழியாக நுழைந்த பிறகு, இந்த பூஞ்சை மூளை, கண்கள் மற்றும் நுரையீரலை குறிவைக்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட் மற்றும் கருப்பு பூஞ்சை நோயாளிகள் நன்றாக வேகவைத்த சிக்கனை உட்கொள்ளலாம்.

மேலும் பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில், "சிக்கனிலிருந்து கருப்பு பூஞ்சை பரவுவதாகப் போடப்பட்ட அந்த ட்வீட், பகிர்ந்து, அதில் “சிக்கன் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும், இந்த பதிவு உண்மை இல்லை" என தெரிவித்துள்ளது. 

 அந்த ட்வீட்டில் மேலும், "இந்த தொற்று சிக்கன் சாப்பிடுவது மூலம் மக்களுக்கு பரவுகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை." எனவும் PIB  விளக்கம் அளித்துள்ளது.

Editor's Choice

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் சாதாரணமாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொருவரும் சாதாரணமாக அனுபவிப்பவையாக இருக்கும். இருப்பினும் ஒருவர் குறைவான இரத்த அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் மன அளவிலும், உடலளவிலும் வலுவிழந்தவர்களாக இருப்பார்கள். இந்த குறை இரத்த அழுத்தத்தை ஹைப்போ டென்சன் என்றும் அழைப்பார்கள்.

பொதுவாக குறைவான இரத்த அழுத்தத்தை சிறு வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சீராக்க முடியும். ஏனெனில் இரத்த அழுத்தமானது மன அழுத்தம், தவறான உணவு முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் இரத்தம் குறைவாக இருப்பதால் ஏற்படுபவையாகும்.

ஆனால் இந்த இரத்த அழுத்தமானது மிகவும் குறைவாக இருந்தால், அது இரத்த ஓட்டத்தின் அளவை குறைத்து, இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டினை பாதித்து, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். எனவே இரத்த அழுத்தம் குறைவாக ஆரம்பித்தால், அதனை உடனே கவனித்து விட வேண்டும். இல்லாவிட்டால், மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும்.

தலைச்சுற்றல்

உங்களுக்கு அடிக்கடி தலைச்சுற்றல் போல் இருந்தால், உடனே கவனமாக இருங்கள். ஏனெனில் உடலில் இரத்த அழுத்தமானது குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் முதன்மையானது தான் தலைச்சுற்றல் வர ஆரம்பிப்பது.

மறதி

இரத்த அழுத்தமானது குறைவாக இருந்தால், ஞாபக மறதி ஆரம்பமாகும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு முன்பு ஒரு இடத்தில் வைத்த பொருளை எங்கு வைத்தோம் என்பதையே மறக்கக்கூடும்.

பார்வை மங்குதல்

திடீரென்று அவ்வப்போது பார்வையானது மங்க ஆரம்பிக்கும். இந்த அறிகுறியும் குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளுள் ஒன்று.

உடல் பலவீனம்

எதையும் தூக்க முடியாத அளவில் உடலானது மிகவும் பலவீனமாக இருந்தாலும், குறைவான இரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம்.

சோர்வு

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளில் ஒன்று தான் சோர்வு. உடல் பலவீனத்தை தொடர்ந்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத அளவில் உடல் சோர்வாக இருக்கும். இப்போது சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால், சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.

குமட்டல்

அவ்வப்போது குமட்டல் ஏற்பட ஆரம்பித்தால், அது கூட குறைவான இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியே. இப்போது சிறிது எலுமிச்சை ஜூஸை குடித்தால், குமட்டல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குளிர்ச்சியான சருமம்

எப்போது காரணமே இல்லாமல், சருமமானது குளிர்ச்சியடைந்து, உடல் நடுங்க ஆரம்பிக்கிறதோ, அப்போது உடலில் போதிய இரத்தம் இல்லை என்று அர்த்தம். இப்படி இரத்தம் இல்லாவிட்டால், குறை இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.

மயக்கம்

தலைச்சுற்றலைத் தொடர்ந்து, அவ்வப்போது மயக்கம் ஏற்பட ஆரம்பித்தாலும், இரத்த அழுத்தம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

வெளிர் சருமம்

உடலில் போதிய இரத்தம் இல்லாமல், குறைவான இரத்த அழுத்தம் இருந்தால், சருமமானது வெளிர் நிறத்தில் இருக்கும். இக்கட்டத்தில் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்து வர வேண்டும்.

பக்கம் 4 / 49