Editor's Choice

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய வைரஸ்கள் அதிதீவிரமாக பரவி, அதீத பாதுப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புதிய வகை வைரஸ்களுக்கு B.1.1.7, B.1.671.2 போன்ற அறிவியல் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில், இந்த புதிய வகை வைரஸ்கள் முதலில் கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர் கொண்டு, இந்திய வகை, தென் ஆப்பிரிக்க வகை, பிரிட்டன் வகை என்று அழைக்கப்பட்டு வந்தன. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதை கருத்தில் கொண்டு, புதிய வகை வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின், வைரஸ் பரிணாம பணிக்குழு கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக வைத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 வகை கொரோனாவை கப்பா எனவும், B.1.617.2 வகை கொரோனாவை டெல்டா எனவும் பெயரிட்டுள்ளது. இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட வகையை ஆல்பா என்றும், தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வகையை பீட்டா எனவும் உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ், “ஒவ்வொரு புதிய வகைக்கும் கிரேக்க எழுத்துக்களிலிருந்து பெயர் வழங்கப்படும். இது பொது விவாதத்தை எளிதாக்குவதற்கு உதவும். பொது உரையாடல்களுக்கு உதவவே புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது அறிவியல் பெயர்களுக்கு மாற்று இல்லை,” என்து தெரிவித்தார்.

 

Editor's Choice

நம் வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுகளின் அடிப்படையில் நமது உடலில் உள்ள புரத சத்து வித்தியாசப்படுகிறது. நாம் அனைவருக்கும் வெவ்வேறு அளவிலான புரத தேவைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தினமும் உடற்பயிற்சி செய்பவருக்கு, உட்கார்ந்தே இருக்கும் மனிதனை விட ஒரு நாளைக்கு அதிக புரதம் தேவைப்படும். புரத சத்து குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்ப்போம்.

சில உடல் எடையை குறைக்க விரும்பி தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுவது, டயட்டில் இருப்பது என இடைவிடாமல் போராடி வருவார்கள். ஆனாலும் உடலில் எவ்வித வித்தியாசத்தையும் காண முடியாது. இதற்கு புரதம் பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் போதுமான புரதத்தை உட்கொள்ளாதபோது ​​உங்கள் உடலால் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது. இதன் விளைவாக நீங்கள் கொழுப்பை எரிப்பதற்கு பதிலாக உங்கள் தசைகளை இழக்க வழிவகுக்கிறது. குறைந்த புரத உட்கொள்ளல் உங்கள் ஆற்றல் அளவையும் குறைக்கக்கூடும், இதனால் நீங்கள் உடலில் சத்து இல்லாதது போல உணர்வீர்கள். எனவே நீங்கள் போதுமான அளவு புரத சத்தை தினமும் எடுத்து கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நமது மனநிலைக்கு காரணமான பல்வேறு வகையான ஹார்மோன்கள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தை ஒருங்கிணைப்பதற்கு புரதம் முக்கியமானது. எனவே புரத சத்து பற்றாக்குறை நிலையற்ற மனநிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிச்சல் , கோபம், வெறுப்பு என நிலையற்ற உணர்வுகள் ஏற்படும். செரோடோனின் என்ற மகிழ்ச்சியாக உணரக்கூடிய ஹார்மோன்கள் புரதச்சத்து குறைபாட்டால் மந்தமாகிறது. இதன் விளைவாக நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்வீர்கள்.

நம் உடலுக்கு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும்போதெல்லாம் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். போதிய அளவு புரதத்தை எடுத்து கொள்ளாத போது, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது. இதனால் உங்கள் உடல் பசியை தூண்டுகிறது. உங்கள் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதை உறுதிப்படுத்த புரதம் நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள். பருப்பு வகைகளான பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, முந்திரி, பால், கொண்டைக்கடலை, சோயா வகைகள், கோதுமை, ராகி, போன்றவற்றில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. அசைவ உணவுகளில் முட்டை, இறைச்சி, மீன், நண்டு போன்றவற்றில் அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது.

எலும்பு வலிமைக்கு கால்சியம் அவசியம், ஆனால் நமது எலும்புகளில் 50 சதவீத ஆரோக்கியம் புரதங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் டி மற்றும் கால்சியத்துடன், எலும்பு ஆரோக்கியத்திற்கு புரத சத்தும் முக்கியமானது. வயதான நபர்களின் எலும்பு அடர்த்தியைப் பாதுகாப்பதில் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது. உங்களின் மூட்டுக்கள் ஏராளமான தசைகள் மற்றும் ஜவ்வுப்பகுதி நிறைந்த ஒன்று. ஆரோக்கியமான மூட்டுகளுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம்.

உங்கள் தோல், முடி மற்றும் நகங்கள் புரதத்தால் ஆனவை, எனவே இயற்கையாகவே புரதத்தின் குறைபாடு அவை மீதும் பிரதிபலிக்கும். கடுமையான புரத குறைபாடு சருமம் சிவத்தல், நகங்கள் சிதைவு, வலிமையற்ற நகங்கள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். மேலும் முடி உதிர்வு, முடி மெலிதல் மற்றும் உடையக்கூடிய நகங்கள் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். வீக்கம் மற்றும் வீங்கிய சருமத்திற்கு வழிவகுக்கும் எடிமா, புரத சத்து குறைபாட்டின் மற்றொரு அறிகுறியாகும்.

ஒவ்வொரு ஆரோக்கியமான மனிதனுக்கும் சராசரி ஓவ்வொரு கிலோகிராம் எடைக்கும் ஒரு கிராம் புரதம் தேவைப்படும். உதாரணமாக 70 கிலோ எடை உள்ள ஒரு மனிதனுக்கு தினமும் 70 கிராம் முதல் 90 கிராம் வரை புரதம் தேவைப்படும்.

Editor's Choice

உப்பை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் குளோரைடு தாதுக்களைப் பெறுகிறோம். நமது உடல் செயல்பாடுகளுக்கு சோடியம் முக்கியமானது. மேலும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க குளோரைடு முக்கியமானது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வின்படி, உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், உணவில் அதிக உப்பை சேர்ப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் உயிரணுக்களின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடலுக்கு ஆபத்தான் பாக்டீரியாக்களை நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்க முடிவதில்லை. ஈ.கோலி (E.Coli) பாக்டீரியாவால் சிறுநீரக நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம்.

எலிகளை ஆய்வு செய்ய லிஸ்டீரியா பாக்டீரியாக்களை அவற்றுள் செலுத்தின. பாதிக்கப்பட்ட எலிகளில் எந்த எலிகளுக்கு அதிக உப்பு உள்ள உணவு வழங்கப்பட்டதோ, அவற்றின் நிலைமை மிகவும் சிக்கலாக மாறியது கண்டறியப்பட்டது. அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலின் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் பலவீனமடைகின்றன. இது முக்கியமாக பாக்டீரிய சிறுநீரக நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அல்லது 5 கிராமை விட குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். இது ஒரு நிலையான அளவாகும். குழந்தைகளில் இந்த அளவு குறைக்கப்பட வேண்டும். இது தவிர, ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான உப்பின் அளவு உங்கள் உடல் செயல்பாடுகளின் அளவையும் பொறுத்து இருக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் கால்சியத்தை அகற்றிவிட்டு சோடியத்தைச் சேர்க்கின்றனர். இதனால் நாம் நீர் அருந்தும்போது நம் உடலில் மறைமுகமாக உப்பு சேர்கிறது. அதேபோல் பன், ரொட்டி போன்றவற்றில் சோடியம் பை கார்பனேட் சேர்க்கிறார்கள். இதனால்தான் பலர் உப்பு சேர்க்கப்படாத ரொட்டி, பிஸ்கட்டுகளை கேட்டு வாங்குவார்கள்.

மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். வயது அதிகரிக்க அதிகரிக்க அதன் செயல்திறன் குறையும். 80 வயதாகும்போது சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தச் சூழலில் உப்பு அதிகம் சேர்த்தால் அவை உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டிவிட்டு சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும் தன்மை குறைந்துவிடும். இதனால்தான் கால் மற்றும் உடலில் வீக்கம் ஏற்படும்.

உப்பு தேவையான ஒன்றுதான் என்றாலும் அதிகரித்தால் ரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக்கோளாறு ஏற்படலாம். அன்றாட உணவில் சேர்க்கும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த நாளத்தின் உட்சுவரில் கொழுப்பு படிந்து செயல்திறன் குறைந்துவிடும்.

உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சூழலில் உப்பு சேர்த்தால் கூடுதலாக கெடுதலை ஏற்படுத்தும். உப்பு அதிகமானால் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களைவிட ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் உப்பைக் குறைத்தாலும் பிரச்சினை ஏற்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

உணவில் உப்பை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண், இதயச் சுவரில் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் ஏற்படும். ரத்தத்திலும் உப்பின் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் எலும்பின் அடர்த்தி குறைந்துவிடும்.

சில நோய்கள் தாக்கும்போது உப்புச் சத்து அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ரத்தத்தில் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் எனப்படும் அமிலச் சத்துகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உப்பினை அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது”.

Editor's Choice

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஒரு மர்மமான மூளை நோய் கனடாவின் நியூ பிரன்சுவிக் பகுதி மக்களிடையே அச்சத்தையும் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் எங்கு உருவானது எப்படி பரவுகிறது என்பது பற்றி இன்னும் அறியப்படவில்லை. 

கடந்த ஆறு ஆண்டுகளில், பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுமார் 6 பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் வடகிழக்கு நியூ பிரன்சுவிக்கில் உள்ள அகேடியன் தீபகற்பத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கிராமமான பெர்ட்ராண்டின் மேயரான யுவோன் கோடின் கூறியதாவது, "மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.‘ இது சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்பா? இல்லை இது மரபணு தானா? அல்லது இது மீன் அல்லது மான் இறைச்சியால் வருகிறதா? இல்லை வேறு ஏதாவது? என பல கேள்விகளை மக்கள் எழுப்பி வருகிறார்கள். மர்மமான நோய்க்கு மருத்துவர்களாலும் மற்றும் மருத்துவ வல்லுநர்களாலும் இன்னும் நம்பத்தகுந்த பதிலைக் கண்டுபிடிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்படுபவர்கள் தூக்கமின்மை மற்றும் பலவீனமான நினைவக செயல்பாடுகள் மட்டுமல்லாமல், பார்வை மாயத்தோற்றங்களையும் அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.

இப்போதைக்கு, நோயின் தோற்றம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும், செல்போன் கோபுரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சுதான் இந்த நோயைப் பரப்புகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதுதவிர கோவிட் 19 தடுப்பூசிகள் ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

அனைத்து நாடுகளின் ஒரே கவலையாக கொடிய SARs-COV-2 வைரஸ் இருப்பதன் காரணமாக, மர்ம நோய் ஆரம்பத்தில் சுகாதார அமைப்பின் கவனத்தையும் ஈர்க்கத் தவறிவிட்டது. ஆனால் இப்போது வரை 48 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டோரதி ஷெப்பார்ட், ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது, "புதிய மற்றும் அறியப்படாத இந்த மர்ம நோயால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நியூ பிரன்சுவிக்கர்கள் இந்த சாத்தியமான நரம்பியல் நோய்க்குறி குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

Editor's Choice

தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் மூன்று தடுப்பூசிகளை தவிர பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசிகளில் ஒன்று தான் கோர்பேவாக்ஸ் (Corbevax) ஆகும். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயாலஜிகல்-இ (Biological-E) நிறுவனம் தயாரிக்கிறது.  சுமார் 30 கோடி Corbevax தடுப்பூசிகளை வாங்க, மத்திய அரசு  ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

கோர்பேவாக்ஸ் வைரஸின்,  SARS-CoV-2 என்னும் வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியான ஸ்பைக் புரதத்தினால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியால் ஆனது. ஸ்பைக் புரதத்தை  உடலுக்குள் செலுத்தும் போது, வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.

நோவாவாக்ஸ் (Novovax) என்னும் ஒரு புரத அடிப்படையிலான தடுப்பூசியையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. Biological E  தயாரித்துள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசி தற்போது 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

எம்.ஆர்.என்.ஏ (mRNA) தடுப்பூசிகள் (பைசர் மற்றும் மாடர்னா), வைரஸ் வெக்டர் தடுப்பூசிகள் (அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு / கோவிஷீல்ட், ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஸ்பூட்னிக் வி (Sputnik V) அல்லது இன் ஆக்டிவேடட் தடுப்பூசிகள் (கோவாக்சின், சினோவாக்-கொரோனாவாக் மற்றும் சினோபார்மின் SARS-CoV- 2 தடுப்பூசி-வெரோ செல் (Vero Cell) ஆகியவற்றிற்கு இது வரை ஒப்புதல் கிடைத்துள்ளன.

முமையான SARS-CoV-2 வைரஸின் கொல்லப்பட்ட துகள்களை உள்ளடக்கிய இனாக்டிவேடட் தடுப்பூசிகள், வைரஸின் முழு கட்டமைப்பையும் குறிவைத்து தகக முயற்சிக்கின்ற்ன

மறுபுறம், mRNA  மற்றும் வைரல் வெக்டர் (viral vector) கோவிட் 19 தடுப்பூசிகளைப் போலவே, கோர்பேவாக்ஸும் (Corbevax,) ஸ்பைக் புரதத்தை மட்டுமே குறிவைக்கிறது, ஆனால் வேறு வழியில் செயல்படுகிறது.

வைரல் வெக்டர்மற்றும் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் ஒரு குறியீட்டைப் பயன்படுத்தி நம் உயிரணுக்களைத் தூண்டுவதற்கான ஸ்பைக் புரதங்களை உருவாக்குகின்றன.

மற்ற COVID-19 தடுப்பூசிகளைப் போலவே, கோர்பேவாக்ஸும் இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்,

இருப்பினும், இது குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால், இது நாட்டில் கிடைக்கும் மலிவான தடுப்பு மருந்தில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோர்பேவாக்ஸ் இரண்டு டோஸ்களின் விலை ரூ.500 க்கும் அல்லது ரூ.400-க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விலை நிர்ணயம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பயாலஜிகல்-இ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Editor's Choice

இரவில் தாமதமாக சாப்பிடுவது பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பெரும்பாலும், மக்கள் தங்கள் உணவு ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள இரவில் மோசமான உணவுகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இனிப்பு வகை உணவுகள், கார்பனேட்செய்யப்பட்ட பானங்கள் அல்லது அதிக கலோரிகளைக் கொண்ட உப்பு சிற்றுண்டிகளை சாப்பிடுவது அதிக உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக இவை வேகமான எடை அதிகரித்தலை ஊக்குவிக்கின்றன. எனவேதான் இரவு சாப்பாட்டை கட்டுப்படுத்த இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது எனக் கூறுகின்றனர்.

சமீப நாட்களாக எமோஷ்னல் ஈட்டிங் என்று சொல்லக்கூடிய கலாச்சாரம் பெருகிவிட்டது. அதாவது அதிகமாக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது மகிழ்ச்சியில் இருந்தாலோ உடனே நன்கு சாப்பிட வேண்டும் என நினைக்கின்றனர். இதுபோன்ற உணர்ச்சிகள் இரவில்தான் அதிகம் வரும் என்பதால் இரவு நேரங்களில் அதிக உணவுகளை சாப்பிட முற்படுகின்றனர். எனவே இந்த எமோஷ்னல் ஈட்டிங் உடல் பருமனின் பேராபத்து என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுத் தேர்வு இரவில் சில உடல் நலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். அதாவது இரவில் சாப்பிடும் இந்த உணவுகள் அஜீரணம், வயிற்று மந்தம், அசௌகரிய உணர்வு, ஃபுட் பாய்சன் போன்ற பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்துவிடும். பகலில் சாப்பிட்டாலும் உடல் உழைப்பு இருக்கும். இரவில் சாப்பிட்டவுடன் தூங்கிவிடுவோம் என்பதால் கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

ஆய்வுகள் கூறுவதைக் காட்டிலும் இதுபோன்ற பாதிப்புகள் இரவு தாமதமான உணவு உடல் பருமனோடு பல உடல் ஆரோக்கிய கேடுகளையும் விளைவிக்கின்றன. உடல் எடையை குறைக்க இரவில் தாமதமாக சாப்பிடுவது தவறு என்பது இப்போது தெளிவாகிறது.

மனித கடிகாரத்தின்படி உங்கள் உணவு அட்டவணையை வகுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு , சிறந்த செரிமானம் மற்றும் இரவில் தடையற்ற தூக்கத்திற்கு, படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள். பெரும்பாலான சுகாதார வல்லுநர்களும் இதைத்தான் பரிந்துரைக்கின்றனர். மேலும், உங்கள் தினசரி கலோரிகளின் அளவைக் கண்காணிக்கவும், வொர்க்அவுட்டுக்கு சிறிது நேரம் ஒதுக்கினால் தூக்கம் நன்கு வரும்.

பக்கம் 2 / 49