வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக...

SOCIAL SHARE
Pin It

செல்வம் நம் வீடுகளில் நிரம்பி வழிய லக்ஷ்மியை வணங்கி, அந்த அஷ்ட லக்ஷ்மி வீட்டில் குடியேற வேண்டுமெனில் நாம் பல வழிமுறைகளை செய்ய வேண்டும். 

முதலில் தினமும் விடியற்காலையில் எழுந்து நம் வீட்டின் வாசலில் பசு மாட்டு சாணம் தெளித்து அதன் பின்  தவறாமல் கோலம் போட வேண்டும். அடுத்தாக அதிகாலையிலே நீராடி இறைவனை வணங்கி அதன் பின் சமைக்க வேண்டும்.

தினமும் காலை சூரிய பகவானை வணங்க வேண்டும். தேவாரம், திருவாசகம் பாடல், கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் வாசித்தல் வேண்டும். மேலும் அன்னதானம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையேனும் வீட்டை கழுவி விட வேண்டும்.

திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும்.  முடிந்தவரை மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும். மேலும் வீட்டின் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் அஷ்ட லக்ஷ்மி குடியேறி மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள்.

ARUNACHALAM