உடல் எடை ஏன் கூடுகின்றது?
நாம் உழைப்பிற்க்கு ஏற்ற உணவை உட்கொள்வதில்லை. உட்கார்ந்தே வேலை செய்யும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. இதனால் உடலில் இரத்த ஒட்டம், கலோரிகள் அதிகரிப்பு, கூடிக்கொண்டே இருக்கும். உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள் அனைத்தும் கொழுப்பாக மாறி உடல் எடை கூடிவிடும். அவரவர் வேலையிற்கு ஏற்ப உணவு முறையினை மாற்றியமைத்தால் நிச்சயமாக உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
அப்படி தவறினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரலாம். உடல் எடையை குறைக்க சில வழிகள்
1. நீராகாரம் அடிக்கடி எடுத்து கொள்வதினால், வயிறு நிறைந்து விடும். அடிக்கடி உணவு எடுத்து கொள்வதை தவிர்க்கலாம்.
2. பச்சை காய்கறிகள், கீரைகள், பழச்சாறுகள் என சாப்பிடும் போது ஊட்டச்சத்து கிடைக்கும் அதே நேரத்தில் கலோரிகள் சேராமல் இருக்கும்.
3. முடிந்தவரை படியில் ஏறவும். லிப்ட், எலிவேட்டர் பயன்படுத்த கூடாது. உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இவ்வாறு பின்பற்றினால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
4. வாரம் முழுவதும் வேலைக்கு போகிறவர்கள் சனி, ஞாயிறு மட்டும் உடற்பயிற்சி செய்யலாம்.
5. இரவு உணவை முடிந்தளவு விரைவாகவே எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 1 மணி நேரங்கழித்து படுக்கையிற்கு செல்லும் போது, நிச்சயமாக கலோரிகள் கரையும்.
6. நல்ல பசித்தப்பின் சாப்பிடுவது நல்லது என்றாலும், நேரந்தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக பசி எடுத்து சாப்பிடும் போது அதிக கலோரிகள் சேர்ந்து விடும்.
7. உணவுகளில் எது அதிக கலோரி உள்ளது என அறிந்து உண்ணவும். கிடைத்ததை சாப்பிடுவதை விட உணவின் தரத்தை அறிந்து உண்ணுதல், உடல் எடையினை சீராக வைக்க உதவும்.
8. வாழைப்பழம் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் அதிக நார்சத்து உள்ளதால், நம் உடலில் உடற்சக்தியை வெளிப்பட உதவி செய்கின்றது. மேலும் வாழைப்பழத்தில் வைட்டமின், மிரைசஸஸ், ஆண்டி ஆக்ஸிடன்ட் நார்ச்சத்து, டிரிப்தபன் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. நாள் ஒன்றிற்கு 2 வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் 120 கலோரிகள் உள்ளன.
9. குளிர் காலத்தில் இறைச்சி உணவுகளுக்கு மாறாக கேரட்டை உண்வதால் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் எடை அதிகமாகாமல் பார்த்து கொள்ளலாம்.
10. உருளைகிழங்கை தோலோடு வேகவைத்து சாப்பிட்டு வந்தால், உருளைகிழங்கில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்தானது கெட்ட கொழுப்பை கரைக்கும். எத்தனை முயற்சிகள் எத்தனை பயிற்சிகள் செய்தும் உடல் எடை குறைக்க முடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். பசிக்கும் போது உணவு, வியர்வை சொட்ட உடல் வேலை, உடல் சோர்வடையும் போது உறக்கம் இந்த மூன்றையும் கடைப்பிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.













