இந்த கோடையிலும் நன்கு செழிப்பாக வளரக்கூடிய சில செடிகள் -
தோட்டத்தில் வளரும் அனைத்து செடிகளுக்கும் பண்புகள் ஒன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு
பண்புகள்/சிறப்பியல்புகள் உள்ளதோ, அதேப் போன்று செடிகளுக்கு ஒவ்வொரு பண்புகள் இருக்கும்.
அந்த வகையில் கோடையில் தான் ஒருசில செடிகள் நன்கு வளரக்கூடியது.
அதிலும் சென்னையில் அடிக்கும் வெயிலின் அளவை சொல்லவே வேண்டாம்.வெளியே நடக்க முடியாத அளவில் வெயிலானது அடிக்கிறது. அப்படியிருக்க, இங்கு அனைத்து விதமான செடிகளும் வளர வாய்ப்பில்லை. ஆனால் இந்த நேரத்திலும் நன்கு வளர்வதற்கு ஒருசில அழகான செடிகள் உள்ளன.
*கருங்கற்றாழை*
இந்த செடி பூக்காது. ஆனால் பார்ப்பதற்கு, தாமரை மலர் மலர்ந்திருப்பது போன்று அழகாக காணப்படும். நேரடியான சூரிய வெளிச்சம் இருந்தாலும், தண்ணீரின்றி நீண்ட நாட்கள் இருக்கும்.
*மூங்கில்- Bamboo*
எந்த சூழ்நிலையிலும் வளரக்கூடியது.
*மணிவாழை/கல் வாழை - Canna*
இந்த செடியில் பல நிறங்களில் மலர்கள் மலரும். அதிலும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
*சால்வியா- Salvia Flowers*
ஊதா நிறப் பூக்களுடன், வெப்பமான சூழ்நிலையிலும் செழிப்புடன் வளரக்கூடியது.
*பென்டாஸ் செடி - Pentas*
மலர்கள் நன்கு கொத்து கொத்தாக அழகாக மலரும்.
*வாழைமரம் - Banana Tree*
இது நல்ல நிழலைத் தருவதோடு, கோடையில் நல்ல காற்றையும் கொடுக்கும்.
*பலூன் மலர்-Bell Flowers*
இது கொடியாக படர்ந்து வளரக்கூடிய மற்றும் ஒரு அழகான ஊதா நிற பூக்களைக் கொண்டது. இது ஒரு வற்றாத ஆண்டு முழுவதும் மலரக்கூடிய செடியாகும்.
*சூரியகாந்தி*
இதன் பெயரைக் கொண்டே, இது சூரிய வெப்பத்திலும் நன்கு வளரக்கூடியது என்பதை அறியலாம்.
*அச்சில்லியா (Yarrow)*
அச்சில்லியா என்னும் யாரோவ் செடி, கொத்து கொத்தாக பூக்களைக் கொண்டது. இதுவும் வருடம் முழுவதும் வாடாத அழகான பூக்களைக் கொண்டது.













