நம்மில் பலரும் நினைத்து கொண்டு இருபது போல நம்மாழ்வார் இன்றைய கால நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.அவர் பயோடெக்னாலஜியின் அத்தனை விதமான பரிமாணங்களையும் எப்பொழுதும் மிகவும் ஆழமான விடயங்கள் தெரிந்து வைத்திருப்பார் .
அவரின் நேரடி வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும்.இருப்பினும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் பயிர்களால் மண்ணுக்கு, மனிதனுக்கு அதிகமான கேடு ஏற்படும் என்ற காரணத்தை அறிந்து கொண்டு நம்மாழ்வார் அதனை எதிர்த்தார். நமது பாரம்பரிய விதைகளை கொண்டு உருவாக்கிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.
இவரது வழிகாட்டுதலில் மூலம் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி விவசாயி திரு .அந்தோணிசாமி அவர்கள். அதில் மிக பெரும் வெற்றியும் பெற்றுள்ளார் .இன்றும் இந்த எலுமிச்சை மிகவும் விரும்பி வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பி.டி ( Genetically Modified) கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் எண்ணத்தில் அன்றைய மத்திய அரசின் சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் , நம்மாழ்வார் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேச செய்தார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைய நமது மாநில முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் BT கத்தரிக்கு தடை உத்தரவும் பெற்றனர்.
60 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ பெரும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது இந்தவகையான கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ( சிறு ,குறு மற்றும் பேரு விவசாயிகள் ) கூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த கால கட்டடத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காகன தோ அல்லது விவசாயிகளுக்கு பயன் தர கூடியதோ அல்ல.இவைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் ரசாயன உரங்களை விற்பனை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உணவு அரசியலே,இதனை அரசு பசுமைப் புரட்சி பெயரில் கலப்பின ஊக்குவிப்பு” என்றார் .













