ஆப்பிரிக்காவின் நாட்டின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் மிகப்பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும். இந்த மடகாஸ்கர் நெல் நடவு பற்றிய பயன்கள் மற்றும் விளைச்சல் பற்றி 1960-களில் வெளியே தெரிந்தது. இந்த முறையில் விதை, நீர்,
நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது நமது முன்னோடி தமிழர்கள்தான் என்ற உண்மையை தக்க ஆதாரங்களுடன் உலகிற்கு எடுத்து கூறி நிருபித்தார் .இன்றைக்குத் நமது தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது .இந்த பெருமையும் இவரையே சேரும் .
ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தத காலத்தில் இத்தாலி நாட்டில் நடந்த அவசர ( Fast Food ) உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார் அவர்களால் இங்கு ஆரம்பித்து வைக்க பட்டது தான் இன்றைய ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு பல இடங்களில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியமான சிறுதானிய சாமையும் கம்பு உணவுகள் போட்டிபோட முடிகிறது .
சுற்றுசுழல் ஆர்வம் , தாய்மொழி பற்று மற்றும் வயலில் பாடுதல் :
நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல. மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளர் . மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். அதற்கான காரணமாக அவர் கூறியவை சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது, மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார். அனைத்து கலந்துரையாடல்களிலும் , அனைத்து கருத்தரங்குகளிலும் “ நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு “ இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.
தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான் இருக்கும் .இருப்பினும் , தமிழ் ,ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் அறிந்தவர். ஒரு பாமரனுக்கு தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் அவனிடம் ஆங்கிலத்தில் சொன்னால் என்ன புரியும் என்பார்.
இயற்கை வாழ்வியல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் மிக அதிகமான ஈடுபாடு கொண்டவர் .கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ள மிகுந்த ஈடுபாடு காரணமாக கற்று கொண்டும் இருந்தார் .
திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு மிக நல்ல குரல் வளம். வயலில் விவசாய வேலைக்கு என்று இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். அதிலும் பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்ற பாடல்கள் மிக அதிகமுறை ராகமிட்டுப் பாடும் பாடல்கள் ஆகும் .
இயற்கை இயைந்த வாழ்க்கை முறை :
நம்மாழ்வார் அவர்கள் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து விடும் வழக்கம் கொண்டவர். மேலும் அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை சரியாய் 4.30 மணி ஆகிவிட்டது என்று உறுதியாகச் சொல்லலாம்.காலையில் எழுந்ததும் வேப்ப மரகுச்சியில் பல் துலக்கிவிட்டு,யோகாசனம் செய்யும் வழக்கம் உண்டு .இதில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி என்று தனது உடல் நலனில் அக்கறை கொண்டவர்.இதன் காரணமாக தனது உடலுக்கான கால அட்டவணையை பின்பற்றும் வழக்கம் கொண்டவர் . இவை அனைத்தும் தினமும் நடக்கும் அதன் பின்தான் தனது வழக்கமான அலுவல்களை ( பயிற்சி வகுப்புகள் , பயணம் போன்று ) தொடர்வார் .













