தமிழையும் தமிழ் மண்ணையும் காத்த ஐயா கோ. நம்மாழ்வார்

SOCIAL SHARE
Pin It

தனது மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது சட்டை அணிய கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர், அதிகமான  பனிக்காலத்திலும்கூட சட்டை அணியவில்லை .



தனது பொதுவாழ்க்கையில் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். வாழ்நாளின்  எங்கு சென்றாலும் பொதுப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தினார். தன்னை சுற்றிஇருந்த மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது பல நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முயன்ற பொழுது அவர் கூறிய  பதில் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று மறுத்து விட்டார் .

தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. எப்பொழுதும் முகுந்த மரியாதையுடன் “வாங்க… போங்க” என்று தான்  அழைப்பார்.

வாழ்நாளின் கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் .கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி   பண்ணையில் சுமார் 5,000 அதிகமான இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை நேரடியாக அவரிடம் முடித்திருக்கிறார்கள்.அந்த பணி இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது .

 

இயற்கை வேளாண்மை வித்தகரின்  பிறப்பும் இறப்பும்

தமிழகத்தில் நெல் களஞ்சியமாம் தஞ்சாவூர்  மாவட்டம் , திருக்காட்டுப்பள்ளி , இளங்காடு என்னும் சிறிய கிராமத்தில்  6 April 1938 அன்று பிறந்தார் .

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பேரழிவுத் திட்டத்துக்கு எதிராக கிராமம் கிராமமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே  “30 December 2013” அன்று இயற்கை எய்திநார். தனது வாழ்நாளின் இறுதிவரையில் இயற்கையை மீட்க போராடிக்கொண்டே இருந்தார்.

ARUNACHALAM