நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அடிப்படை வீதத்தை 0.10 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. SBI பிரதான கடன் விகிதத்தை (Prime Lending Rate) 0.10 சதவீதம் அதிகரித்து 12.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும், MCLR விகிதத்தில் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.
SBI நீண்ட காலத்திற்குப் பிறகு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. சில காலமாக, வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைத்துக்கொண்டிருந்தது.
சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, நகைகள் வாங்குவதிலும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, நகைகள் வாங்குவதிலும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
SBI-யின் தங்க கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம். SBI-யின் இந்த சலுகையின் மூலம், வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
SBI-யின் இந்த சிறப்பு தங்க கடன் சலுகை 7.25 சதவீதம் என்ற மிகக் குறைந்த ஆண்டு வட்டி விகிதத்திலேயே கிடைக்கிறது. இதை இந்த வகையில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் தங்கக் கடனை எடுத்தால், இதற்கான வட்டியாக 7,250 ரூபாயை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். தனது SME Gold Loan-னின் வட்டி விகிதம் மற்ற அனைத்து வங்கிகளையும் விட குறைந்தது என்றும், இதில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் SBI கூறுகிறது.













