ஐ.ஐ.டி பம்பாயில் உள்ள கேந்திரியா வித்யாலயாவின் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் தினேஷ் படேல், தமிழ் உட்பட 47 மொழிகளை பேசும் ரோபோவை உருவாக்கியுள்ளார். ஒன்பது இந்திய மொழிகளையும் 38 வெளிநாட்டு மொழிகளையும் பேசுகிறாள் ‘ஷாலு’. தமிழ், ஆங்கிலம், இந்தி, போஜ்புரி, மராத்தி, பங்களா, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம் என 9 இந்திய மொழிகள் ஷாலுவுக்கு அத்துப்படி.
ரோபோ பெண்ணைப் போன்றே இருக்கிறது. ஷாலுவுக்கு கோபம், சிரிப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். ஆனால், கைகளை அசைப்பது போன்ற பல மனித சைகைகளை செய்ய முடியாது,
பிளாஸ்டிக், அட்டை, மரம், அலுமினியம் போன்ற கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஷாலு உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது, 50,000 ரூபாய் செலவில் ஷாலு ரோபோவை உருவாக்கிவிட்டேன் என்று படேல் சொல்கிறார்.
ஷாலுவால் மனிதர்களை அடையாளம் காணமுடியும், மனப்பாடம் செய்யவும், பொது அறிவு, கணிதம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.
“ஷாலு மக்களுடன் பேசும், சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், செய்தித்தாளைப் படிக்கும், வேறு பல செயல்களையும் செய்யும். பள்ளிகளில் ஆசிரியராகவும் அலுவலகங்களில் வரவேற்பாளராகவும் பயன்படுத்த உகந்த ரோபோ”.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸைப் பயன்படுத்தி ஷாலு ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் mask போன்றவற்றை பயன்படுத்தி, ரோபோவை அழகுபடுத்த முடியும் என்று படேல் கூறுகிறார். அலுவலக வேலை மற்றும் அன்றாட வீட்டு வேலைகளுக்கு ஷாலு ஒரு சரியான தேர்வாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பல துறைகளிலும் பயன்படுத்தலாம். ஷாலு அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகம்.













