அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்ந்து மூன்று முறை தடுக்கி விழுந்தும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் மசாஜ் சென்டர் ஒன்றில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, அங்குள்ள ஆசிய-அமெரிக்க சமூகத்தினரிடம் பேச ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து நேற்று புறப்பட்டார்.
விமானப்படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் ஒரு முறை கீழே விழுந்தார். அவர் அடுத்தடுத்து தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.விமானத்தின் படிக்கட்டுகளில் அவசரம் அவசரமாக அவர் ஏறியதால் 2 முறை தடுக்கியதுடன், கடைசியாக தடுக்கி விழுந்தே விட்டார்.
விழுந்து, எழுந்து, முழங்கால்களை தடவிக்கொண்டு, தொடர்ந்து ஏறி விமானத்தின் கதவுக்கருகே நின்று, ஒரு சல்யூட் வைத்துவிட்டு உள்ளே சென்று மறைகிறார் பைடன். அவர் மூன்று முறை தடுமாறியும், மூன்றாவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவச் சென்றது போல தெரியவில்லை. இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் எதுவும் தங்கள் பத்திரிகைகளில் முக்கியப்படுத்தவில்லையாம்.
வெளிநாட்டு ஊடகங்கள்தான் பைடன் விழுந்ததை பெரியதாக செய்தியாக்கியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை வட்டாரமோ, பைடன் காற்று பலமாக வீசியதால் தடுமாறியதாக தெரிவித்துள்ளது.













