WhatsApp, Facebook, Instagram சேவைகள் முடங்கியது ஏன்?

SOCIAL SHARE
Pin It

வாட்ஸ்அப்,  இண்ஸ்டாகிராம் மற்றும்  பேஸ்புக் (Facebook)  சேவைகள் உலக அளவில் நேற்று பல இடங்களில் முடங்கியது.

இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர். மேலும் 25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை  எதிர்கொண்டனர்.

"சில பேஸ்புக் சேவைகளை அணுகுவதில், தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது.  இந்த சிக்கலை நாங்கள் தீர்த்து வைத்தோம், மேலும் மக்கள் சிக்கலை சந்தித்ததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று பேஸ்புக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் (Instagram) தனது ட்வீட்டில், "சிலருக்கு தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர், ஆனால் இப்போது பிரச்சினை சரி செய்யப்பட்டது. சிக்கலுக்கு வருந்துகிறோம்" எனக் கூறியுள்ளது.

உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அதன் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமில் சிக்கல்களை சந்தித்தாக புகாரளித்ததை அடுத்து, சேவைகள் பல விதமான தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் இன்கார்பரேஷன்  தெரிவித்துள்ளது. " பல அணிகள் சேவையை மீட்டெடுக்க பணியாற்றி வருகின்றன, எங்களால் முடிந்தவரை விரைவில் சேவையை மீட்டெடுப்போம்" என்று பேஸ்புக்கின் கேமிங் யூனிட் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

ARUNACHALAM