எஸ்கியூஎல் ஒரு பார்வை

SOCIAL SHARE
Pin It

தரவுதள உலகில் எஸ்கியூஎல் எனும் தொடர்பு தரவுதளம் (Relational Database)என்றும் நோஎஸ்கியூஎல் எனும் தொடர்பற்ற தரவுதளம்(Non Relational Database) என்றும இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன தொலைபேசி அல்லது கைபேசி புத்தகத்தில் பெயர், முகவரி, கைபேசி எண் ஆகியவை பட்டியலாக கட்டமைக்கப்பட்டிருப்பது முதல் வகையாகும் .

அதாவது இவற்றில் ஆவணங்கள் குறிப்பிட்ட நீள அகலத்தில் அட்டவணை படுத்த பட்டிருக்கும். இதில் ஆவணங்கள் நெடுவரிசையாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இதில் அதிகஅளவு செயல்பாடுகளை மிக விரைவாக செயல்படுத்திட முடியும்.

இதில் நல்ல அனுபவம் நிறைந்த விவரம் அறிந்தவர்கள் மட்டுமே இதனை கையாளமுடியும் மேலும் இதனை செயல்படுத்தி கையாளுவதற்கு கூடுதலான தனியான கட்டமைவு கொண்ட தற்காலிக நினைவகம் தேவையாகும்.

இதில் தரவுகள் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்டதாக சேமிக்கப் பட்டிருப்பதால் தரவுகளின் கட்டமைவை எளிதாக மாற்றியமைத்திட முடியாது.

இது ACID(atomicaly , consistency, isolation, durability) complaince எனும் தன்மையுடன் இருப்பதால் மின்வணிகம் நிதிபயன்பாடுகள் போன்றவைகளில் இந்த வகையை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது

2000 ஆவது ஆண்டுவரை போட்டியாளர்கள் யாருமில்லாமல் தனிப்பட்ட ராஜாவாக இந்த எஸ்கியூஎல்எனும் தரவுதளமே கோலோச்சி வந்தது.

கோப்பகங்களில் பல்வேறு வகையான அதாவது அனைத்து விவரங்களும் கோப்புகளாக தகவல்களாக தொகுக்க பட்டிருக்கும் முகநூல் போன்ற சமூதாய இணையதள பக்கத்தை பயன்படுத்திடும் நபர்களின் அனைத்து விவரங்களும் தொகுத்து வைத்திருப்பது இந்த வகையை சேர்ந்ததாகும்

இது கிளஸ்டரின் அடிப்படையில் செயல்படுத்தபடும் குறைந்த நினைவகமே போதுமானதாகும் அதனால் இதன் பராமரிப்பு செலவு மிககுறைவாக உள்ளது.

அதிக அளவான பேரளவு தரவுகளை கையாளும் திறன்மிக்கது இதனை எளிதாக பழுதுநீக்கம் செய்து பராமரித்திடலாம் இதனுடைய தரவுகளை எளிதாக பகிர்ந்தளிக்கலாம். முன்கூட்டியே வரையறுக்கப்படாததால் இதில் தரவுகளை உள்ளிணைப்பதும் இதிலிருந்து தேவையான தரவுகளை பெறுவதும் எளிதாகும் இதனை செயல்படுத்திடுவதற்கென தனியான தற்காலிக நினைவகம் தேவையில்லை தரவுகளை சேமித்து வைத்திட குறிப்பிட்ட வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுபாடுகள் எதுவும் இல்லாதாதல் எந்தவகை கட்டமைவான தரவுகளாக இருந்தாலும் இதில் சேமித்திடலாம்.

இது மேககணினியின் அடிப்படையில் செயல்படவும் சேமித்திடவும் செய்கின்றது புதியவர்கள் குறைந்த நேரத்திலேயே இதனை கற்று பயன்படுத்தி கொள்ளும் வசதி கொண்டது. இந்த போட்டிமிகுந்த நோஎஸ்கியூஎல் எனும் தொடர்பற்ற தரவுதளத்தினை புதியவர்கள் கூட எளிதாக கையாளமுடியும்

Karisalmedia Admin