ஐஐஓடி ஒரு பார்வை

SOCIAL SHARE
Pin It

தொழிலக பொருட்களுக்கான இணையம் (Industrial Internet of Things) என்பதை சுருக்கமாக IIoT என அழைப்பர் இந்த IIoT ஆனது தொழிலகங்களில் செயல்படுகின்ற பல்வேறு இயந்திரங்களையும் சாதனங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த உதவுகின்றது.

அதாவது பொருட்களின் போக்குவரத்து, மின்னாக்கம், தொழிற்துறை ஆகிய பல்வேறு துறைகளில் இயந்திரங்களையும் வாகனங்களுக்கான உபகரணங்களுக்கான இணைக்கப்பட்ட உணரிகளையும் பிற சாதனங்களையும் தானியங்கியாக செயல்படுவதை இந்த IIoT ஆனது உறுதி படுத்திடுகின்றத ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொருட்களுக்கான இணையம் (IoT) என்பதற்கும் இந்த IIoT என்பதற்கும் என்ன வேறுபாடு எனஅனைவரின் மனதில் கேள்வி எழும் நிற்க இணையத்தோடு இணைக்கப்பட்ட பிரிட்ஜ்,ஒளிரும் விளக்குகள் போன்றவை IoT இன் அடிப்படையில் செயல்படுபவைகளாகும்

தொழிலகங்களின் உற்பத்தியை தானியங்கியாக செயல்படுவதற்கு இணையத்துடன் இணைக்கபடுவது இந்த IIoT ஆகும்

தொழிலகங்களின் சரக்கிருப்பகத்தை கட்டுப்படுத்துதல், பொருட்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், தொழிலகங்களில் செயல்படும் இயந்திரங்கள் பழுதடைந்து நின்று உற்பத்தி பாதிக்காமல் முன்கூட்டியேஅவைகளின் பராமரிப்பை உறுதிபடுத்துதல் , ஆற்றல் நுகர்வை போதுமான அளவிற்கு மட்டும் இருக்குமாறு கட்டுபடுத்துதல், சேமிப்பகங்களில் நாம் சேமித்து வைத்துள்ள பொருட்களின் தரத்தினை பாதுகாத்தல் , தொழிலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பினையும் உடல்நிலையும் பாதுகாத்தல் ,நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை ,காற்றழுத்தம்,ஒசோன் போன்றவைகள கட்டுப்படுத்தல் போன்ற பதினைந்திற்கும் அதிகமான பணிகளைஇந்த IIoT இன் வாயிலாக கையாளமுடியும் என தொழிலக IoT ஒருங்கிணைப்பு குழு பட்டியல்படுத்தியுள்ளது

Karisalmedia Admin