நம்முடைய கிரெடிட் கார்டுவாயிலாக பிட்காயினை பெறுவது ஒரு கடனட்டையுடன் அல்லது நம்முடைய வங்கிகணக்கிலிருந்து நேரடியாக செலுத்தி பொருட்களை கொள்முதல் செய்து பெறுவதை போன்று இது ஒரு மிக எளிய செயலாகும் ஆனால் ஒருசில கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் இதனை செயற்படுத்திட வேண்டும் மின்பணபரிவர்த்தனையில் முக்கிய பங்கு வகிக்கும் மிகபிரபலமான காயின் பேஸ் ,காயின்மாமா,சிஎக்ஸ்ஐஓ ஆகியவைகூட நம்முடைய கடனட்டையை அங்கீகரிக்கின்றன.
ஆயினும் இது விஸா கடனட்டை யையும் மாஸ்டர் கடனட்டையையும் மட்டும் ஏற்றுகொள்கின்றது அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டையை ஏற்றுகொள்ளாது ஆயினும்அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டையை கொண்டு கிரிப்டோ கரன்ஸியை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுகின்றது இதில் நாளொன்றிற்கு 200 டாலர் அல்லது மாதம் ஒன்றிற்கு 1000 டாலர்அளவிற்கு மட்டுமே கையாளமுடியும் என்ற கட்டுபாடு உள்ளது இந்த காயின்பேஸானது.
இவ்வாறான கடனட்டையின் வாயிலான மின்பணபரிவர்த்தனைக்காக 3.99 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கின்றது கடந்த மாதம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின் படி, 18 சதவிகித பிட்காயின் வாங்குவோர் கடன் அட்டையைப் பயன்படுத்தினர் இந்த காயின் பேஸை போன்றே பிட்ஸ்டாம்ப்,ஜிஎக்ஸ்ஐஓ ஆகியனவும் மின்பணபரிவர்த்தனைக்கு விஸா மற்றும் மாஸ்டர் கடனட்டையை ஏற்றுகொள்கின்றன.
எச்சரிக்கை பிட்காயின் கையாளுவது என்பது சூதாட்டம் போன்றது அதனால் எச்சரிக்கையாக கையாளவும்













