முதலில் நாம் கணினியின் அடிப்படைகருத்தமைவை புரிந்து கொண்டபின் இந்த குவைத கணினியின் அடிப்படையை பற்றி அறிந்து கொள்வோம்.இயல்புநிலையில் கணினிக்கு அடிப்படையாக இருப்பது மின்னோட்டம்இல்லாதிருப்பது 0 அல்லது மின்னோட்டம் இருப்பது 1ஆகிய இரண்டில் ஒருநிலையில் மட்டுமே இருக்கும் அதாவது ட்ரான்ஸிஸ்டரில் இவ்விரண்டில் ஒன்றினை கொண்டு உருவாக்கப்டட பிட்ஸ் எனும் இரும எண்களாகும்.
இந்த பிட்களின் பல்வேறு வகைகளின் கலவையாக சேர்ந்து சிக்கலான தகவலை குறிக்க பயன்படுகின்றது பல ட்ரான்ஸிஸ்டர்கள் ஒருங்கிணக்கப்பட்ட லாஜிக் கேட் எனப்படும் தருக்கவாயில்கள் உருவாக்கப்படுகின்றன.
அவை கூட்டல் அல்லது பெருக்கல் போன்ற அடிப்படை கணித செயல்பாடுகளைச் செயல்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள தொகுதிகளாக உருவாகின்றன.
இவ்வாறான பலதொகுதிகளும் புத்திசாலித்தனமான நிரலாக்கங்களும் ஒன்றாக இணைக்கப்-படும்போது தற்போதைய கணினியின் செயல்பாடுகள் கிடைக்கின்றன ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மின்னோட்டம் இல்லாதிருப்பது 0 அல்லது மின்னோட்டம் இருப்பது 1ஆகிய இரண்டில் ஒருநிலையில் மட்டும் இருக்கும் இந்த பிட்ஸ் என்பதே அனைத்து கணினிகளுக்கும் அடிப்படையாகும்.
இந்த பிட்ஸ் என்பதற்கு பதிலாக குவாண்டம் பிட்ஸ் அல்லது க்யூபிட்ஸ் என்பதே குவாண்டம் கணினிக்கு அடிப்படையாகும் அதாவது இந்த மின்னோட்டம்இல்லாதிருப்பது 0 அல்லது மின்னோட்டம் இருப்பது 1ஆகிய இரண்டு மதிப்பும் ஒரே நேரத்தில் சேர்ந்து இருப்பதே இந்த க்யூபிட்ஸ்களாகும்.
இதனடிப்படையில் இந்த னி- பிட்ஸ்கள் அல்லது qubits ஆனதுஒரே நேரத்தில் 16சாத்தியமான கட்டமைப்புகள் அனைத்தையும் கொண்டிருக்க முடியும். மேலும்வளர்ச்சியடைந்து பலமில்லியன் மதிப்புகளை இணையாக தேக்கிவைத்திடும் திறனை இவை பெறுகின்றன.
மேலும் தற்போதைய கணினியானது ஒவ்வொன்றாக செய்து முடித்திடும் பல்வேறு பணிகளனைத்தையும் ஒரேநேரத்தில் முடித்திடும் திறன்மிக்கதாக இந்த குவாண்டம் கணினி உயர்ந்து நிற்கின்றது.
அதாவது இந்த குவாண்டம் கணினியை தற்போது நாம் பயன்படுத்திவரும் கணினியுடன் ஒப்பிடுவது மிகவும் கடினமான செயலாகும், ஆயினும் நம்மால் பிரபஞ்சத்தில் அறியப்பட்ட அனைத்து அணுக்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக கணிப்பீடுகளை ஒருசிலநூறு குவாண்டம் பிட்ஸ்களால் செய்ய முடியும் என்பதே இதன் செயல்திறனின் மிகச்சிறிய அறிமுகமாகும்.
மிகமுக்கியமாக மருத்துவம் இயற்கை விஞ்ஞானம், தரவுத்தள பகுப்பாய்வு, போன்றவற்றின் ஆராய்ச்சிக்கான அடிப்படையாக இந்த குவாண்டம் கணினி பேருதவியாக இருக்கும் பொதுவாக இந்த குவாண்டம் கணினிகளானவை வழக்கமான எந்தவொரு சூப்பர் கணினியை காட்டிலும் அதிகபட்சமாக கணக்கிடுவதை உறுதிப்படுத்துகின்றன.
அவை அணுக்கரு மட்டத்திற்குப் பொருளின் செயல்பாட்டைச் சித்தரிக்க உதவுவதன் மூலம். அல்லது வேறுவிதமான வெல்ல முடியாத குறியீடுகளை முறியடிப்பதன் மூலம் குறியாக்கத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்க முடியும். இவை தரவுகளின் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதன்வாயிலாக செயற்கை நுண்ணறிவைகூட மேம்படுத்திட முடியும் என நம்பபடுகின்றது.













