தற்போதைய வளரச்சியடைந்த நாகரிக உலகில் வியாபாரத்தின் எந்தவொரு செயல் திட்டத்தினையும் மனிதனால் முழுமையாக கட்டுபடுத்திடஇயலாதநிலையுள்ளது இவ்வாறான நிலையில் வியாபார செயல்திட்டத்தினை முழுதுமாக தானியங்கியாக கட்டுபடுத்திடுவதற்காக மேலாண்மைகருவிகள் பலஉள்ளன அவைகளுள் திறமூலகருவிகளும் தற்போது பயன்பாட்டில்உள்ளனஅவைகளைபற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு.
1. ஓப்பன் புராஜெக்ட்
இது இணையத்தின் அடிப்படையில் செயல்படும்ஒரு செயல் திட்டமாகும் இது ஜிஎன்யு பொது அனுமதியின் வின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது இது திட்டமிடுதல், செயல்படுத்துதல் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றோடு மேககணினியுடன் இணைப்பு ஏற்படுத்தி கொள்ளும்வசதியும் கொண்டதாகும் இதற்கான இணையமுகவரி <<https://www.openproject.org/>> ஆகும்.
2. புராஜெக்ட் லிபர்
இது பணிமேலாண்மை, வளங்களை ஒதுக்கீடு செய்தல், கேண்ட்சார்ட் போன்றபல்வேறுவகையான பணிகளை கையாளுவதற்காக பயன்படுகின்றது இது என்எஸ் புராஸக்ட்டுடன் ஒத்தியங்குகின்றது இது அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுகின்றது இதிலிருந்து எளிதாக பிடிஎஃப்கோப்பாக கட்டுபாடுகள் எதுவுமில்லாமல் பெற்று கொள்ளலாம் இதற்கான இணையமுகவரி https://projectlibre.com /ஆகும்.
3. ஆடோ
இது சிஆர்எம், இணைய பக்கங்கள் ,மின்வணிகம், கணக்குபதிவியல், கிடங்குகளின் மேலாண்மை, கையிருப்பு மேலாண்மை, செயல்திட்டமேலாண்மை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த பயன்பாட்டு கருவியாகும் இதுபயனாளர் இடைமுகவசதி பயனாளர்களின் சேவை வசதி போன்றவைகளை அளிக்கின்றது இதற்கான இணைய முகவரி https://www.odoo.com / ஆகும்.
4. வீகான்
இது ஒருகட்டற்ற கட்டணமற்ற பணிமேலாண்மை செயல்திட்டமாகும் இது எம் ஐ டி அனுமதியின் அடிப்படையில் வெளியிடபட்டுள்ளது வரைகலை இடைமுகப்புடன் மேம்பட்ட பணிமேலாண்மை வசதி கொண்டது இதுஐஃபோன், ஆண்ட்ராய்டு ஆகியவற்றில் செயல்படும் திறன்மிக்கது இதற்கான இணையமுகவரிhttps://wekan.github.io/ ஆகும்.
5. ஜென்டோ
இது உற்பத்தி பொருள் மேலாண்மை, செயல்திட்டமேலாண்மை தரமேலாண்மை, ஆவண மேலாண்மை, பணி மேலாண்மை, நிறுவன மேலாண்மை, புள்ளியல் அறிக்கைகள் ஆகிய பல்வேறு வசதி வாய்ப்புகளை கொண்டது இதற்கான இணையமுகவரி <<https://zentao.pm/>> ஆகும்













